Saturday, August 23, 2014

தேர் நிலைக்கு வந்தாச்சு - பகுதி 2

பரிசு மழை

பணி ஓய்வு பெரும் பொழுது இப்படி ஒரு பரிசு மழையில் நனைவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
முதலில் என்னுடன் பணிபுரிந்த அன்புத்தோழமைகள் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பார்ப்போமா?

முதல் பரிசு



இந்த அழகான மாலை என் தோழி டி.கே ஜெயந்தி, என்னுடன் பணி புரிபவர் கொடுத்தது.   அவர் ”நான் வெளிநாடு செல்ல இருப்பதால் இப்பொழுதே கொடுத்து விடுகிறேன்” என்று ஏப்ரல் மாதமே இந்தப் பரிசை எனக்குக் கொடுத்து விட்டார்.  முதல் பரிசு முக்கியமான பரிசு அல்லவா? 

 **********
அடுத்த பரிசு



இந்த SERVING DISH எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்த திருமதி திலக ராணி கொடுத்தார்.  இவரும் தன் மகள் வீட்டிற்கு அமெரிக்கா செல்ல இருந்ததால் பணி ஓய்வு பெறும் தினத்திற்கு முன்பே என் இருக்கைக்கு வந்து, இந்த DISHல் வெற்றிலை, பாக்கு, பழம் ரவிக்கைத் துண்டு ஆகியவைகளைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

**********
 அடுத்த பரிசு

இந்த விநாயகர் என்னுடன் பணி புரிந்துவிட்டு வேறு அலுவலகத்தில் (எல்லாம் எங்க DEPARTMENT தான்) பணி புரியும் திருமதி ராஜி நாராயணன் கொடுத்தது. 



என்னுடைய உதவியாளர் பெயர் திரு விநாயகம். (PHONE MECHANIC) நான் எப்பொழுதும் விநாயகம், விநாயகம் என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பேன். பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு 2, 3 நாட்கள் முன்பு, பக்கத்து அறையில் இருந்த ஒருவர், ‘அம்மா எத்தனை நாளைக்கு இப்படி விநாயகம், விநாயகம்ன்னு கூப்பிடப் போறீங்க.  இன்னும் 2, 3 நாள் தானே’ என்றார்.  அதற்கு நான், ‘இல்லை, இல்லை வீட்டிற்கு சென்றதும் எப்பொழுதும் அந்த விநாயகனை (அதான் தொப்பையப்பனை) கூப்பிட்டுக் கொண்டே இருப்பேன்.  அவன் எனக்கு என்றும் நல்லதைத் தான் செய்வான் என்று சொல்லி ஒரு 5 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது.  ராஜி என் அறைக்கு வந்து ஒரு பார்சலை என் கையில் கொடுத்தாள்.  அதைப் பிரித்த எனக்கு மெய் சிலிர்த்தது.  அதுதான் இந்த விநாயகர்.     ‘என்ன மேடம் நீங்க விநாயகரை கும்புடுவேன்னு சொல்லி 5 நிமிஷம் கூட ஆகலை, இவர் உங்க கையில வந்து உக்காந்திருக்காரே’ என்று திரு குப்பன் (PHONE MECHANIC) என்பவர் ஆச்சரியப்பட்டுப் போனார். முன்னே சொன்ன கமெண்ட்டும் திரு குப்பன் அடித்ததுதான்.
 **********

இந்த மாடும், கன்றும் என் உயிர்த்தோழி திருமதி வசந்தா ராம்குமார் கொடுத்தது. 

 **********

என் மகன், மகளின் புகைப்படம் வைத்திருக்கும் இந்த PHOTO FRAME திருமதி கீதா நாகராஜன் கொடுத்தது. 



                 **********

இந்த வெங்கடாசலபதி, திருமதி உமா மகேஸ்வரி சங்கர நாராயணன் கொடுத்தது.




இது TRAILOR தான். MAIN PICTURE பின்னாடி வரும்.


தொடரும்……………..

Thursday, August 21, 2014

நம்ப ஊரை நாமளே வாழ்த்தலைன்னா எப்படி?

இன்று நம்ம சென்னைக்கு 375 பிறந்தநாள்..!


நான் பிறந்தது முதல் இன்று வரை வளமாக, நலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்காரச் சென்னை மாநகரருக்கு இன்று பிறந்த நாள்.  நீங்களும் வாழ்த்துங்களேன்.

*
***
*****
***
*







தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம், ஆரம்ப காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து இருந்தது. சென்னை கடற்கரை பகுதியை ஒட்டியிருந்த இந்த கிராமங்கள் ‘சென்னப் பட்டிணம்’ என்று அழைக்கப்பட்டது.

1639-ம் ஆண்டு இங்கு வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்டுகளான பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகியோர், இந்தப் பகுதியை ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பு அமைக்க தேர்வு செய்து விலைக்கு வாங்கினார்கள். ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி இந்த நிகழ்வு நடந்ததால், அன்றைய தினமே சென்னையின் முதல் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

அதன் பிறகு ஓராண்டு கழித்து, இன்றைய தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டையை மையப்படுத்தி ஆங்கிலேயர்களின் குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன. இதனால், ஆங்காங்கே பிரிந்து கிடந்த கிராமங்கள் ஒன்றிணைந்து நகரமாக உருவெடுக்க தொடங்கியது.

1688-ம் ஆண்டு சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்தியாவிலேயே முதல் நகர சபை என்ற பெருமை சென்னைக்கு கிடைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் வசம் இருந்த புனித ஜார்ஜ் கோட்டையையும், சென்னை நகரையும் 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளிலேயே மீண்டும் ஆங்கிலேயர் வசம் சென்றது.

அதன்பின்னர், நகர சபையாக இருந்த சென்னை வளர்ச்சியடைய தொடங்கியது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள் ரெயில் பாதைகள் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. சென்னப் பட்டிணம் என்ற பெயர், அதன்பின்னர் மதராஸ் பட்டிணம், மதராஸ் மாகாணம் என்று பெயர் மாறியது.

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மதராஸ் மாகாணத்தின் தலைநகராக சென்னை விளங்கியது. 1956-ம் ஆண்டு மொழி வாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, மதராஸ் தமிழ்நாட்டின் தலைநகரமானது. அதன்பின்னர், 1996-ம் ஆண்டு மதராஸ், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.

அன்று முதல் அனைத்து தரப்பு மொழிகள் பேசும் மக்கள் வசிக்கும் ‘காஸ்மோபாலிடன்’ நகரமாக சென்னை விளங்கிவருகிறது. ஆரம்ப காலத்தில் 30 ஆயிரம் மக்கள்தொகையை கொண்டிருந்த சென்னையில் இன்று ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

சாப்ட்வேர் நிறுவனங்கள், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், கெமிக்கல் நிறுவனங்கள் உள்ளிட்டவை சென்னையில் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்புகளை நம்பி இங்கு அதிகம் பேர் தங்கியுள்ளனர். அவர்களை நம்பி வியாபாரிகளும் கடைகளை விரித்துள்ளனர்.

பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கி வரும் சென்னை மாநகரம் தனது 375-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. அதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் வளர்ந்த நகரங்களுள் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்கினாலும், சுகாதாரமற்ற நீர்நிலைகள், மாசுபடிந்த காற்று என்று வாழத் தகுதியற்ற நகரமாக மாறத் தொடங்கியுள்ளது வேதனைக்குரியது. தெளிந்த நீரோடையாக இருந்த கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கழிவுநீர் ஓடையாகவே மாறிவிட்டது.

இந்த ஆறுகளை சீரமைக்க, காமராஜர் ஆட்சி காலத்தில் இருந்தே திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டாலும், இன்னும் சீரமைந்தபாடில்லை. தற்போது, கூவம் நதியை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக, பணிகளை மேற்கொண்டால் அடுத்த சில ஆண்டுகளில் கூவம் நதியிலும் தெளிந்த நீர் ஓடுவதை மக்கள் கண்டு ரசிக்கலாம். அதை, வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு பிறந்தநாள் பரிசாகவும் நாம் அளிக்கலாம். ஆனால், இதற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் இந்த கனவு நனவாகும்..............

நன்றி:மாலை மலர் நாளிதழ்





Friday, August 15, 2014

மரங்களை அழிக்காதீர்



முகப் புத்தகத்தில் (FACE BOOK) இந்த புகைப்படத்துக்கு 6 வரியில் ஒரு கவிதை எழுதச் சொல்லி இருந்தார்கள் .  

இதற்கு நான் எழுதிய கவிதைக்கு ஆறுதல் பரிசாக ரூ 50/- கைப்பேசிக்கு RECHARGE  செய்தார்கள். 






என் இனத்தை நீ


வெட்டித்தான் சாய்த்தாலும்


வேரறுத்து வீழ்த்தினாலும்


ஒற்றை மரமாய் நான் நின்றாலும்


நிற்க நிழலை நிச்சயமாய்


தந்திடுவேன்.

இருக்கு / இல்லை






திங்கள் ஒன்று முடிந்தது

திருமணம் இனிதே நடந்து முடிந்து.


காலை எழுந்ததும்

நீ குளித்து விட்டாயா

இருந்தாலும் பரவாயில்லைஎன்று

பின்னே வந்து கட்டிப் பிடித்து

புறங்கழுத்தில் முத்தமிட 

அவள் இல்லை



சமையலறைக்கு வந்து

சொட்டு வத்தல் குழம்பை

உள்ளங்கையில் விட்டு சுவைத்து

சூப்பர்என்று பாராட்டவோ

சிட்டிகை உப்பு சேர் என்று 

ஆலோசனை சொல்லவோ 

அவள் இல்லை.



அன்னைக்குப் பரிந்து

தந்தையை உரிமையுடன்

கண்டிக்கவும் அவள் இல்லை.



அலுவலகத்திலிருந்து நான்

வீடு வந்து சேரும் நேரம்

ஐந்து நிமிடம் கடந்தாலும்

எங்க இருக்க

எப்ப வீட்டுக்கு வருவ?’ என்று 

தொலைபேசியில் கேட்க

அவள் இல்லை.



முகம் பார்த்தே

அம்மா உனக்கு என்ன ஆச்சு?

உடம்பு சரியில்லையா?

என்று அக்கறையுடன்

விசாரிக்க அவள் இல்லை.


 

இன்னும் பட்டியல் இட்டால்

எத்தனையோ இல்லைகள்...............

இத்தனை இல்லைகள்

இருந்தாலும் 

ஒன்று மட்டும்இருக்கு



அது என்ன தெரியுமா?



அவள் வீட்டில்

ஆனந்தனுடன் 

ஆனந்தமாய் இருக்கிறாள்

என்ற எண்ணம் மட்டுமே

எனக்கு ஆனந்தமாய் இருக்கு.

முத்துச் சிதறல்


சூரியனும்,

மேகங்களும்

விளையாடும்

கண்ணாமூச்சி

விளையாட்டைக்

கண்டு களித்து நீ சிந்திய

புன்னகைதான்

முத்துச் சிதறலாய் 

பெய்த இந்த மழையோ?



ஏன் வருண பகவானே

கொஞ்சம் இடி, இடியென்று

வேண்டாம் குறைந்த பட்சம்

கல, கலவென்றாவது

சிரிக்கக்கூடாதா? 



பூமித்தாயின்

தொண்டைக்குழிகூட

நனையவில்லையாமே!

கொசுவின் புலம்பல்






நீ தேக்கிய தண்ணீரிலேயே
நான் உருவானேன்.

இறக்கைகள் 
வளர்ந்து,
பறக்கும் போது மட்டும்

மட்டை, வத்திகளைக் கொண்டு
என் உயிரை வாங்குகிறாயே

இது என்ன நியாயம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.










Wednesday, August 13, 2014

தோழிகள் இணைந்தனர்.


இன்று திடீரென்று என்னுடன் www.arusuvai.com ல் இணைந்திருந்த தோழி திருமதி மாலதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கும் திருமதி அனுராதா (இவர் என்னுடன் ஒன்றாக பணி புரிந்தவரும் கூட) தன்னுடன் படித்தவர் போல் இருப்பதாகவும், முடிந்தால் விசாரித்து சொல்ல முடியுமா என்றும் கேட்டார்.  அவர் சொன்ன அடையாளங்களை சொல்லி விசாரித்தால் சாட்சாத் நான் மாலதியுடன் பள்ளியில் படித்த அதே அனுராதாதான் என்றார். மாலதியின் தொலைபேசி எண்களை அனுராதாவிற்கும், அனுராதாவின் தொலைபேசி எண்ணை மாலதிக்கும்  SMS  செய்து விட்டேன்.  கிட்டத்தட்ட 30, 35 ஆண்டுகளுக்குப் பிறகு இரு தோழிகள் இணைவதற்கு நான் ஒரு கருவியாக இருந்ததற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்க நட்பு!.


Thursday, August 7, 2014

தேர் நிலைக்கு வந்தாச்சு – பகுதி 1.



ஆமாங்க. ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தத் தேர் (அட என்னைதாங்க சொல்லறேன்) வேலை என்னும் சாலைகளில் ஓடி 31.05.2014 சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில்  மாலை 0530 மணிக்கு நிலைக்கு வந்துடுத்து.  ஆமாங்க அன்றுதான் பணி ஓய்வு பெற்றேன்.  அதாவது, அலுவலகப் பணியிலிருந்து மட்டும்.  மத்தபடி நம்பள சமையலறை, இட்லி, தோசை, மாவு, கிரைண்டர் இத்யாதி, இத்யாதி எல்லாம் விடவே விடாதே.  இப்ப ஆற, அமர சமைத்து, ஆத்துக்காரருக்கு பக்கத்துல இருந்து சாப்பாடு போட்டு, பழங்கதை, புதுக்கதை பேசி, சரி, அதுக்கெல்லாம் கடைசியா வருவோம்.
 
கொஞ்சம் திரும்பிப் பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு.  இவ்வளவு வருஷங்களா உழைச்சிருக்கேன்.  அம்மாடி.  ஆனா வேலைக்குப் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க.  பல அலுவலகங்கள், பலவித மனிதர்கள், பலப்பல அனுபவங்கள், மனதுக்கு நிறைவான சம்பவங்கள். எல்லாத்தையும் பத்தி கொஞ்சம் விவரமாவே சொல்றேனே.
 
அடையார் டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் (இப்பதான் இந்த பேரு.  நாங்க படிக்கும்போது GOVERNMENT POLYTECHNIC FOR WOMEN) DIPLOMA IN COMMERCIAL PRACTICE 3 வருடப் படிப்பு SHORTHAND HIGHER, TYPEWRITING HIGHER, ACCOUNTANCY HIGHER, மற்றும் COMMERCE SUBJECTS களும் சேர்த்து பாஸ் செய்துவிட்டு வெளியே வந்ததும் எதிர்காலமே ஜகஜ்ஜோதியாக தெரிந்தது.  அந்தக் காலத்துல முக்கால்வாசி பேருக்கும் குலத்தொழிலே TYPEWRITING SHORTHAND தானே.  FINAL YEAR EXAM எழுதின உடனேயே ENGLISH ELECTRIC COMPANYல் வேலை கிடைத்தது.  மிகவும் குறைந்த நாளே அங்கே வேலை செய்துவிட்டு, EMPLOYMENT EXCHANGE ல் பதிவு செய்த உடனேயே (அதெல்லாம் அந்தக் காலம்ன்னு நீங்க புலம்பறது என் காதுல விழுதுங்க)
மாநில அரசாங்கத்துல வேலை கிடைத்தது.  அங்க ஒரு 10 மாதங்கள் வேலை செய்தேன். அதுக்கப்புறம் 22.08.1974 DEPARTMENT OF TELECOMMUNICATIONல STENOGRAPHERஆ JOIN பண்ணினேன். ஆகஸ்ட் 1974ல  இருந்து 31.05.2014 வரை DOT, BSNL இரண்டிலும் மோத்தம் 39 ஆண்டுகள் 9 மாதங்கள் பணி செய்து, நிறைவான பணி செய்து பணி ஓய்வு பெற்று விட்டேன்.  ஆக மொத்தம் கிட்டத்தட்ட 41 ஆண்டுகள், கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வந்துடுத்தா?







Saturday, August 2, 2014

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.



நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.