தாய்மை
நாங்கள் ஊட்டிக்குச் சென்ற போது, பைக்காரா சென்று விட்டு ஊட்டிக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வழியில் ஒரு இடத்தில் இறங்கி குரங்குகளுக்கு வேர்க்கடலையும், கேரட்டும் வாங்கிப் போட்டோம். கடலை விற்ற பெண்மணியின் மகன் அப்பொழுது அங்கு வந்தவர் எங்களிடம், ”அதோ அங்கே உட்கார்ந்திருக்கும் குரங்குக்கு போடுங்க. அது மூணு நாளா செத்த குட்டியை துக்கிக்கிட்டு அலையுது. நாங்களும் மூணு நாளா அத எப்படியாவது வாங்கி புதைக்கணும்ன்னு நினைக்கிறோம், முடியவே இல்லை”என்றார். நாங்கள் அசந்து விட்டோம். பிறகு அந்தக்குரங்கு செத்த குட்டியையும் தூக்கிக் கொண்டு ரோடிற்கு வந்தது. அதன் முகத்தில் சொல்லொணா துயரம். மேலும் அவர் சொன்னது, “அந்தத் தாய்க் குரங்கு, குட்டிக்குரங்கு இறந்த உடன் அதன் வாயில் தன் வாயை வைத்து ஊதியதாம்”. ஒரு வேளை குட்டிக்கு உயிர் வந்து விடும் என்று ஊதி இருக்குமோ?
அந்தக் குரங்கின் தாய்மை உணர்வைக்கண்டு வியந்துதான் போனோம்.
மீள் பதிவு
அன்னை உணர்ந்த வலி/
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி திரு விமலன்.
Deleteநெகிழ்த்துகிறது.
ReplyDeleteவரவுக்கு மிக்க நன்றி. அன்று இரவு முழுவதும் மனம் ஒரு மாதிரி சங்கடத்துடனே இருந்தோம்.
Deleteகடவுளே என்ன கொடுமை... பாவம் அவற்றுக்கு 5 அறிவுதானே, இறந்துவிட்டது இனி எழும்பாது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை அதற்கு.
ReplyDeleteஆமாம் அதிரா. ஆனால் ஐந்தறிவு உள்ளவைகள் ஆறறிவுள்ள மனிதனை விட சில நேரங்களில் அருமையாக செயல் படுகின்றன.
Deleteஅவற்றிடம் மனிதம் உள்ளன என்பதே உண்மை.
ReplyDeleteஆமாம் ஐயா உண்மை தான்.
Deleteராமா... பிள்ளை இழந்த துயரம்... எல்லாருக்குமல்லவா. மனதைச் சஞ்சலப்படுத்தியது.
ReplyDeleteஆமாம்.
Deleteமனம் வேதனையில் ஆழ்ந்தது.
ReplyDeleteநேரில் பார்த்த போது எங்களுக்கு ஆச்சரியமும், மிகுந்த வேதனையும் ஏற்பட்டது.
Delete