Monday, June 19, 2017

எனக்கு WHATSAPPல் வந்த சிறுகதை.  படித்தேன், ரசித்தேன், உங்களூக்காகப் பகிர்ந்தேன்.   படங்கள் மட்டும் என்னுடையவை.



குரங்கு பெடல்












தோட்டத்த பாத்திங்களா ? என்ற வளர்மதியின் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை எதிர்கேள்வியே கேட்டேன். ஏன் என்ன ஆச்சு ? பாருங்க அப்புறம் சொல்றேன். போடி காலை பாத்துக்கிறேன்... டயர்டா இருக்கு என என் அலுலக சோம்பலோடு சோபாவில் விழுந்தேன். சரி அப்படியே போய் குளிச்சிட்டு வந்துட்டா சூடா சப்பாத்தி ரெடியா இருக்கு.. என்ற குரல் என்னை பாத்ரூம் நோக்கி தள்ளியது.

”இன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்.. யாரோ கூப்டுறாங்கனு வாசப்பக்கம் போய் பார்த்தேன். ரெண்டு வயசானவங்க. ஏதும் வீட்டு வேலைஇருக்காமானு கேட்டாங்க... ? பார்க்க பாவமா இருந்துச்சு... இருங்கனு சொல்லிட்டு ரெண்டு ஆப்பிள் கொடுத்தேன். வாங்கி வச்சிட்டு... பழையது இல்லையாமனு கேட்டாங்க... நா எங்க போக பழசுக்கு... நாங்க நைட் எப்பவும் சப்பாத்தி இல்லாட்டி ஓட்ஸ்னு சொன்னேன். இந்த தோட்டத்தை சுத்தப்படுத்தி தரோம்னு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லலாம்னு பார்த்தேன். அப்புறம் எப்படியும் தோட்ட வேலைக்கு ஆள் வரசொல்லுவிங்க ரூவா கொடுக்கணும்ல... அதான் சரினுட்டேன்.”

ம்ம்ம் அப்புறம்

செமய சுத்தப்படுத்தி... நல்லா பாத்துகொடுத்துட்டாங்க. ரூ. கொடுத்தேன் வாங்கல.. மதியம் சோறு மட்டும் கேட்டாங்க. சாப்ட்டு போய்ட்டாங்க.

ம்ம். பார்த்து இரு.. இந்த மாதிரி பகல்ல வந்து வீட நோட்டம் பாத்துட்டு சொல்லுவாங்க.

உங்க வாய் இருக்கே என்னைக்கு நல்லத சொல்லியிருக்கு.

ஒய்.. உலகம் நடப்ப சொல்றேண்டி... சும்மா பாலிமர்ல சீரியல் பார்த்தா இதெல்லாம் எங்க தெரியும்...

நீங்க மூடுங்க. லேடிஸ் ரஸ்லிங் பாக்கிறதுக்கு சீரியல் தேவல. போய் படுங்க

நான் சத்தமாய் சிரிக்க கூடுதல் கடுப்பில் சென்றாள். ஆனாலும் தோட்டத்தை பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. நேராக படுக்க சென்றுவிட்டேன். தூங்கி எழுவதற்குன் என்னைப்பற்றி.. நான் முத்துக்குமரன். சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தலைமை பொறுப்பில் இருக்கிறேன். ஒரே மகன். இப்போது கோடை விடுமுறைக்கு என் அண்ணன் வீட்டுக்கு சென்று இருக்கிறான். என் மனைவி வளர்மதி. கம்யூட்டர் பட்டதாரி. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வெப் பேஜ் டிசைனிங் நிறுவனம் நடத்துகிறாள் நண்பர்களோடு சேர்ந்து. வீடு சோழிங்கநல்லூர் கடைசி.

ம்ம்ம்ம். நிசமமாவே காசு வாங்கலயா...

அவருக்கு காது கேட்காது போல. அந்தம்மா தான் பேசுது. சோறுபோட்டா போதும்னு சொல்லிட்டாங்க.

ஆம அந்த குழி எதுக்கு...

இங்க விழுற இலைகளை பெருக்கி அந்த குழிக்குள்ள தள்ளிடுங்கனு சொல்லிட்டு போனாங்க.

ம்ம்ம் . ஒகே. இதே மாதிரி மெயிண்டைன் பண்ணா நல்லா இருக்கும்.

நீ ஆபிஸ் கிளம்பலயா... பேச்சை நிறுத்த நாம் செய்ய வேண்டிய வேலையை சொல்வது மனைவிக்கு அழகு.

அடுத்த சில தினங்களில் இரவு என் அருகே மனைவி.

என்னங்க இன்னைக்கும் அவங்க வந்தாங்க.. நீங்க சொன்னது என் மைண்ட்ல ஒடிட்ட்டே இருந்துச்சு. தோட்டவேலை வேண்டாமா கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்குனு சொன்னேன். ஆன அதுக்கு அந்தம்மா.. இல்லைம்மா தோட்டத்தில் இவ்ளோ இடம் இருக்குல்ல.. கொஞ்சம் காய்கறி போட்ட..வீட்ல நல்ல காய்கறி கிடைக்கும்ல சொன்னாங்க. கூடவே தக்காளி கத்திரிக்கா,சின்ன வெங்காய விதையெல்லாம் காட்டுனாங்க.

சரி.. உடனே நீ சரி சொல்லிட்ட.

ம்ம்ம்.. பார்த்தா நல்லவங்க மாதிரி தெரியுது. அதான் கேமரால அவங்க உருவம் எல்லா இருக்கும்ல அப்புறம் ஏன் பயப்படுறீங்க...

சரி. உன் இஷ்டம்.

அப்புறம் நாளைக்கும் வராங்க.... நம்ம வீட்டு கிச்சன் இருந்து நாம பாத்திர கழுவுற தண்ணீய அப்படியே செடிகளுக்கு கொண்டு போய்ருவோம்னு சொல்றாங்க.

அதான் பாத்ரூம் குழாய் போதுல்ல..

அங்க சோப் எல்லாம் போடுரோமாம்...கெமிக்கல்னு சொல்றாங்க.

ஒரே ஒரு குழாய் மட்டும் போதும்னு சொல்றாங்க.. வாங்கிபோடச்சொல்லவா ? வீட்லயே நல்ல காய்கறி கிடைச்சா நல்லது தானே..

என்னமோ செய். காலைல ஏடிஎம்ல எடுத்துக்கோ... நம்ம கடையிலே வாங்க சொல்லு. என் மனைவி என்னைவிட சாமர்த்தியசாலி. லேசுக்குள் நம்ப மாட்டாள் அந்த நம்பிக்கையில்... காலம் ஓடியது. கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கி விட்டது.. கிட்டதட்ட மாதங்கள் கடந்திருந்தது.. இதற்கிடையே அவர்கள் வீட்டுக்குள் வரும் அளவிற்கு பழகி விட்டார்கள். ஆனாலும் தோட்டம் சுத்தமாய் இருந்தது. மரங்கள் எல்லாம் பசுமையாய் மாறிவிட்டன. அவை குளிர்ச்சியை கொடுத்தது. அதிலும் குறிப்பாய் வரண்டு போய் இருந்த முருங்கையும், செம்பருத்தியும் வனப்பாய் இருந்தது.

என்னடி இது...

அரிசி உப்புமா கத்திரிக்கா கிச்சடி.. கத்திரிக்கா நம்ம வீட்ல விளைஞ்சது.

ஞாயிற்றுகிழமை சாப்டுற சாப்பாடா இது..

மூச். சும்மா சாப்டு பாருங்க.. வாசனையே செமயா இருக்கு.

உண்மையில் அப்படித்தான் இருந்தது. என் வாழ்நாளில் அப்படி ஒரு கத்திரிக்காய் கிச்சடி சாப்பிட்டது இல்லை. மதியம் என்ன தெரியுமா ? நெய் கத்திருக்காய் பொறியல்.

போச்சா.. இன்னும் ஒரு வாரம் இதானா..

இல்லபா நீ வீட்ல இருக்கும் போது தான் இத செய்ய முடியும். இன்னொரு நாள் சிக்கன் சமைப்போம்.

இவ்ளோ விதையோடவா கத்திரிக்கா இருக்கும். ஆச்சரியத்தின் ஊடாகவே சாப்பிட்டேன். எனக்கு என் வீட்டு தோட்டத்தில் விளைந்த கத்திரிக்காய் என்பதே பெருமையாய் இருந்தது. என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.

இன்னைக்கு ஆபிஸ் கிடையாது போல...

ஏண்டி...

ம்ம்ம்ம் ஏதோ கலவரமாம். கட்சிக்காரன யாரோ வெட்டி கொன்னுட்டாங்களாம். போன் பண்ணி கேட்டுகோங்க.. பக்கத்து விட்டு பசங்க காலேஜ் போகாம திரும்பி வந்துட்டாங்க. நான் அலைபேசியில் பேசினேன். நான் செல்லும் வழியில் தான் பிரச்சினை என்பதாலும்.. ஏற்கனவே சிலர் வந்துவிட்டதாலும்.. இருப்பவர்களை வைத்து கவனிக்கும் படி சொன்னேன். மதியத்திற்கு பிறகு வருகிறேன் என உத்திரவாதம் கொடுத்தேன். மிண்டும் பேப்பரில் மூழ்கினேன்.

யப்பா இங்க வாயேன் என்ற குரலுக்கு வாசலுக்கு வந்தேன். வந்ததும் தெரிந்தது.. இவர்கள் தான் அவர்கள் என்று. இதான் என் வீட்டுகாரரு. அவர்களை பார்த்தேன்... எப்படியும் இருவருக்கும் அறுபது வயதிற்க்கு மேல் இருக்கும்.

வணக்கம்யா. கத்திரிக்க நல்லா இருந்துச்சா.. அந்தம்மா பேசினார்.

நல்லா இருந்துச்சுமா

இன்னும் கொஞ்சநாள்ள சின்ன வெங்காயம் வந்துரும்.. அங்கிட்டு நாட்டுச் செம்பருத்தி வந்துரும். அது மூலிகை. இந்த மண்னுல் வேகம வளரும் அது. நான் பாப்பாட்ட சொல்லியிருக்கேன் அத எண்ணெய்ல போட்டு பயன் படுத்தலாம்.. நல்ல குளிர்ச்சி. முருங்கையும் அப்படித்தான். இப்ப காச்சிரும்.. பூ பூத்ததும் புள்ளைக்கு கொடுங்க.. வயிறு அப்படி சுத்தமாகும் சளியே வராது. இறங்கிடும். அந்த பெரியவர்.. இதில் எல்லாம் கலந்துகொள்ளாவில்லை. அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார். என் மனைவி வீட்டில் இருந்து காபி கொண்டு வந்தார். அதை வாங்கி குடித்துவிட்டு அவர்கள் வேலையை செய்ய தொடங்கினார்கள். என் மனைவி அவர்களோடு பேசத்தொடங்கிவிட்டார். நான் உள்ளே வந்துவிட்டேன்.

வேலை முடிந்து அவர்கள் கைகால் கழுவும் சத்தம் கேட்டது. நான் வெளியே வந்தேன். திண்டில் அவர்களும் நான் ஊஞ்சல் சேரிலும் அமர்ந்தோம்.

ஏன் பணம் வாங்கமாட்டேன்கிறீங்க...

புள்ள சோறு கொடுக்குது. அதுக்கு தானே தம்பி உழைக்கிறோம்... அதுவே கிடைச்சுட்டா அப்புறம் எதுக்கு பணம்

மத்த தேவைக்கு...

பையன் இருக்கான் தம்பி. ஒரு கடையில சூப்பர் வைசர். நல்ல சம்பளம். அவன் பாத்துக்கிறான்.

அப்புறம் ஏன் இப்படி இந்த வயசுல வேலை பார்க்கணும்..

இது வேலை இல்ல தம்பி..ஒரு சந்தோசம். காலம் காலமா விவசாயம் பாத்தவங்க.. இப்ப நிலம் இல்லை... வித்துட்டோம்.. அதான்

இப்படி எத்தனை வீட்ல வேலை நடக்குது..

இந்த ஒரு வீட்ல தான்.

ஏன் ஏன்.. இந்த ஏரியால இதை விட பெரியபெரிய வீடெல்லாம் இருக்கே..

அந்த அம்மா பதில் சொல்லவில்லை. பெரியவர் முகம் பார்த்தார்.

அவர் பேசினார். முதன் முறையாக... இதான் எங்க நிலம்.

எனக்கு சுருக்கென்றது. அங்கே ஒரு அமைதி நிலவியது. உங்க நிலமா... நான் பேங்க் லோன்ல வாங்கி இன்னும் லோன் கட்டிக்கிட்டு இருக்கேன். எப்படி உங்க நிலம்...

அவரே தொடர்ந்தார்.. இந்த நிலத்தில தான் நான் என் அய்யா எல்லாரும் விவசாயம் பார்த்தோம். சுத்திமுத்தி எல்லாரும் வித்துட்டாங்க.. சொல்லிப்பார்த்தேன் யாரும் கேட்கல... நான் நடுவில நிலத்த வச்சி என்ன செய்ய.. அதான் வித்தேன். வித்த காசுல பொண்ணுக்கு பையனுக்கும் பிரிச்சு கொடுத்தாச்சு. எங்களுக்கு கொஞ்சம் பேங்கல இருக்கு.

பெரியவரே நிலம் என்னோடது. நான் காசு போட்டு வாங்கியிருக்கேன். அவருக்கு காது கேட்காது என என் மனைவி சொன்னது நியாபகம் வந்தது.. இன்னும் சத்தமாய் சொன்னேன்.

நிலத்துக்கு மேல தான் நீங்க வாங்க முடியும். நிலத்துக்கி கீழ இல்ல ...கீழ என்ன நடக்குது விவசாயிக்கு தான் தெரியும் எப்பவும் எல்லா நிலமும் முதல்ல விவசாயிக்கு தான்.

எனக்கு கோபம் வந்தது. ஒ அதுனால தான் வந்து வேலை பாத்திங்களா.. நிலம் உங்கதுனு... கொஞ்சம் சத்தமாய் கேட்டேன்.

அய்யோ தம்பி கோபபடாதீங்க. நான் அந்த அர்த்ததில சொல்லல... என் பொண்ண நகை பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாரு என் மாப்பிள்ளை. அதனால் என் பொண்ணு இல்லனு ஆயிடுமா. இதே இந்த மகராசி.. என் மனைவியை கை காட்டினார்... அப்படித்தானே இங்கே வந்திருப்பாங்க. இவங்க மேல இருக்கிற நகை நட்டு இந்த வீடு எல்லாம் உங்களுக்கு சொந்தம் ஆனா உள்ள ஓடுற ரத்தம் இவங்க அப்பா அம்மாக்குள்ள சொந்தமில்லையா. இரண்டு பேர்க்கும் உரிமை இருக்குல்ல. இன்னைக்கும் ஒரு கல்யாணம் காட்சினு அம்மாவீட்டு போய் உக்கார மாட்டாங்களா.. இல்ல இவங்க அம்மா அப்பா எங்களுக்கு தொடர்பே இல்லைனு போய்டுவாங்களா... அது மாதிரி எங்களுக்கு இந்த நிலம். நீங்க வாங்கிட்டிங்க..ஆனாலும் இந்த மண் நாங்க புரண்ட மண் இல்லையா... இத உரிமைல சொல்லல.. உழைச்சிருக்கோம்ங்கிற நம்பிக்கையில சொல்றேன் தம்பி.

எனக்கு கோபம் கொஞ்சம் குறைந்தது.. ஒரு வித ஆற்றாமை பொங்கியது. என்ன சொல்வது என தெரியவில்லை. இந்த பக்க நிலமெல்லாம் காந்த பூமி தம்பி. எது போட்டலும் பூமியில அப்படி புடிச்சி நின்னுகும். மருந்து அடிக்காம இருந்தா கிடைக்கிற ஒவ்வொன்னும் ஒரு மருந்துக்கு சமம். எங்கே.. எல்லாம் போச்சு.. வெறும் வீடுதான். பாருங்க இத்துணூண்டு இடத்திலே இவ்ளோ கிடைக்குது. இனி நீங்க கடையில் கத்திரிக்கா பாத்த என்ன தோணும்.. வீட்டுக்காய் மாதிரி வருமானு தானே..

அதே மாதிரிதான் தம்பி.. என் நிலம்னு எனக்கு தோணும். எத்தனை பேர் கைமாறட்டும். இது என் நிலம் தாம் தம்பி. ஏற்கனவே நிலத்த வித்து காசு வாங்கிட்டேன்.. இப்ப பார்க்கிற வேலை காசுக்கு இல்லை.. ஒரு திருப்திக்கு. இதுல கொஞ்சம் வேலை பார்த்துட்டு படுத்த்தா.. அன்னைக்கு உறுத்தல் இல்லாம தூங்குவேன். ஏதோ அய்யன் கொடுத்த நிலத்தை வித்துட்டோமோனு ஒரு குற்ற உணர்ச்சி. என்னென்னமோ கெமிக்கல் போட்டு நிலத்தை கொன்னு.. செத்த போன நிலம் தண்ணிய வாங்கி வாங்கி குடிக்குது... இது தெரியாம விவசாயி சாகுறான். அவன் நிலம் சாகுது. என்ன செய்ய ..? சின்ன வயசுல சைக்கிள் கத்துக்கும் போது குரங்கு பெடல்னு ஒன்னு போடுவோமே டக்டக்னு ... அது மாதிரி தான் எங்க வாழ்க்கை... வண்டி என்னமோ முன்னாடித்தா போகுது.. ஆனா போற இடத்துக்குள்ள உசுரும் போய்டுது..

சோறு கொண்டா தாயி.. சாப்டு கிளம்புவோம்.. என குரல் கொடுத்தார் மனைவியை நோக்கி.

வாங்களேன் உள்ளே வச்சி சாப்பிடலாம்... அழைத்தேன்

அய்யோ நீங்க ஹோட்டல்காரங்க மாதிரி டேபிள்ள வைச்சி சாப்பிடுவிங்க. சரியா வராது . சாப்பிட்ட திருப்தியே வராது தம்பி.

என் மனைவி பறிமார அவர்கள் சாப்பிட்டார்கள். நான் உள்ளே இருந்தேன். ஆனால் மனம் முழுவதும் அவர்கள் பேச்சில் இருந்தது.

எப்ப வேணா நீங்க வீட்டுக்கு வரலாம்... இது உங்க வீடு மாதிரி.. என்ன வேணா போட்டு வளருங்க.. என்னால் முடிஞ்ச உதவி செய்றேன்.அவர்கள் கிளம்பிக்கொண்டிருக்கும் போது முகம் பார்த்து சொன்னேன்.

ரொம்ப நன்றி தம்பி. ஏதும் பேசியிருந்தா மன்னிச்சுடுங்க... உசுரோடு இருக்கிற வரைக்கும் எங்க மண்ணுல வேலை பார்த்தோம்னு திருப்தி போதும். அத கொடுத்திட்டீங்க..நன்றி தம்பி ...என விடைபெற்றார். அப்போதுதான் உணர்ந்தேன்.. அவருக்கு காது கேட்கிறது. ஆனால் விவசாயம் தவிர்த்து எதுவும் பேசவேண்டாம் என அவர் காதுகளை மூடிவிட்டார் என தெரிந்தது. முதல்முறையாக வீட்டை விட தோட்டம் அழகாய் தெரிந்தது...!!!!
 

Image may contain: 1 person



39 comments:

  1. புது மாதிரி ஆளுங்களா இருக்காங்க. கதைகளில்தான் சாத்தியம். எனக்கொன்று தோன்றியது. என் நிலம், என் நிலம்ங்கறாரே... ஒரு காலத்தில் அவர்களும் யாரோ ஒருவரிடமிருந்துதான் வாங்கியிருப்பார்கள் இல்லையா! அவர்களும் வந்து என் நிலம் என்றால் எப்படி இருக்கும்!! என்ன இவர் அளவு வேறு யாரும் அந்த நிலத்தை நேசிக்கவில்லை என்று தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம்

      இருக்காங்க அந்த மாதிரி ஆட்கள். நாங்கள் 21 வருடம் தாம்பரம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் என்ற இடத்தில் எங்கள் சொந்த வீட்டில் வசித்தோம். 2008ல் அங்கிருந்து ஆதம்பாக்கம் வந்தோம். 2013ல் அந்த வீட்டை விற்று விட்டோம். என் மகள் திருமணமானபின் எங்கள் மாப்பிள்ளையை அழைத்துச் செல்லச் சொல்லி அந்த வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிந்ததும், எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், போனவர்கள், உறவுக்காரக் குழந்தைகள், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் என்று அனைவரும் சிலாகித்து எழுதி இருந்தனர். உங்களுக்கு முகநூலில் அந்த லிங்க் தருகிறேன் பாருங்கள்.

      Delete
    2. இது சாத்தியம். கதையில் வருவது வேறு! தஞ்சையில் 70 களில் நாங்கள் இருந்த வீட்டின் முன், மதுரையில் 80 களில் நாங்கள் இருந்த வீட்டின் முன் என சமீபத்தில் நாங்களும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்தோம். அது இனிய நினைவு. ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்ய முடியாதே...!! தவறாக நினைக்க வேண்டாம். தோன்றியதைச் சொன்னேன்.

      Delete
    3. ஸ்ரீராம், உங்களுக்காகவே எங்கள் வீட்டு புகைப்படத்தை இங்கு பதிந்திருக்கிறேன். பாருங்கள். 8 தென்னை மரங்கள் (அதில் ஒன்று அந்தமானில் இருந்து என் அலுவலக நண்பர் கொண்டு வந்து கொடுத்த தென்னங்கன்று). நாங்கள் ஆண்டு அனுபவித்த வீடு அது.

      Delete
    4. நன்றி. நல்லாயிருக்கு.

      Delete
    5. //ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்து சுத்தம் செய்ய முடியாதே...!! தவறாக நினைக்க வேண்டாம். தோன்றியதைச் சொன்னேன்.//

      இதில் தவறாக நினைக்க ஒன்றும் இல்லை ஸ்ரீராம்.

      Delete
  2. மிகவும் அழகான நியாயமான அருமையான ஆச்சர்யமான கதை.
    மிகவும் ரஸித்துப் படித்து மகிழ்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படித்தான் அண்ணா இருந்தது.

      Delete
  3. எனக்கு தரைத்தளத்தில் ஒரு சின்ன வீடும், வீட்டைச் சுற்றிலும் தோட்டம் போடும் கொஞ்சம் நிலமும், இதுபோன்ற சின்ஸியரான ஒரு ஜோடி தோட்டப் பராமரிப்பாளரும் தேவை என எனக்குள் நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, ஸ்ரீராமுக்கு கொடுத்த பதிலை தயவு செய்து படியுங்கள். அப்படியே எங்கள் வீட்டின் புகைப்படத்தைப் பாருங்கள். அச்சு அசலாக நீங்கள் நினைத்தது போல் இருக்கும் எங்கள் கனவு இல்லம்.

      Delete
    2. ஆஹா, தாம்பரம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கத்தில் 21 வருடங்கள் ஜெயா ‘ஜே ஜே’ ன்னு வசித்து வாழ்ந்த வீடு, பார்க்க மிக அழகாக உள்ளது.

      கார்னர் வீடாகவும், இரட்டை கேட்டுடனும் சூப்பராக, பசுமையான மரங்களுடன் குட்டி பங்களாபோல உள்ளது.

      பகிர்வுக்கு நன்றிகள்.

      இப்போது குடியிருக்கும் வீடு ஒருவேளை அதைவிட சூப்பராக இருக்குமோ என்னவோ.

      ஜெயாவால் பராமரிக்கப்படும் வீடு என்றால் அது ஜகத்ஜோதியாகவும் லக்ஷ்மிகரமாகவும் மட்டுமே இருக்க முடியும்.

      இனிய நல்வாழ்த்துகள், ஜெயா.

      நம் கையைவிட்டுப் போன சொத்துக்களை பார்த்தால் மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். எனக்கும் இதில் நிறைய அனுபவங்கள் உண்டு.

      இன்று உன்னுடையது நாளை வேறொருவருக்குச் சொந்தமாகும். அதன்பிறகு அது மற்றொருவருக்குச் சொந்தமாகும். இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமான சொந்தமே இல்லை. இதுதான் உலக நியதியாகும்.

      Delete
    3. ஆமாம் அண்ணா அருமையான மலரும் நினைவுகள்.

      என் தம்பி மனைவியின் சீமந்தம் அங்கு தான் நடந்தது. அப்பொழுது என் தம்பி மனைவி அத்திம்பேர் நீங்கள் ஒரு ஜமீந்தார் போல் இருக்கிறீர்கள் என்று சொன்னாள்>

      நாங்கள் ரசித்து வாழ்ந்த வீடு. இன்றும் என் குழந்தைகளும் அவ்வப்பொழுது அந்த வீட்டில் நடந்த நல்ல நிகழ்ச்சிகளைப் பற்றி அடிக்கடி சொல்வார்கள்.

      Delete
    4. //இந்த உலகில் எதுவும் யாருக்கும் நிரந்தரமான சொந்தமே இல்லை. இதுதான் உலக நியதியாகும்.//

      உண்மைதான். ஆனால் நல்ல நினைவுகள். என்றும் நினைவில் இருக்கும். அதற்கு நான் கடவுளுக்குத்தான் நன்றி சொல்கிறேன். ஒவ்வொரு நொடியும் அவருக்கு நன்றி சொல்லும் நிலையில் என்னை வைத்ததற்கு.

      Delete
  4. //என் பொண்ண நகை பணம் வாங்கி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாரு என் மாப்பிள்ளை. அதனால் என் பொண்ணு இல்லனு ஆயிடுமா. இதே இந்த மகராசி.. என் மனைவியை கை காட்டினார்... அப்படித்தானே இங்கே வந்திருப்பாங்க. இவங்க மேல இருக்கிற நகை நட்டு இந்த வீடு எல்லாம் உங்களுக்கு சொந்தம் ஆனா உள்ள ஓடுற ரத்தம் இவங்க அப்பா அம்மாக்குள்ள சொந்தமில்லையா. இரண்டு பேர்க்கும் உரிமை இருக்குல்ல. இன்னைக்கும் ஒரு கல்யாணம் காட்சினு அம்மாவீட்டு போய் உக்கார மாட்டாங்களா.. இல்ல இவங்க அம்மா அப்பா எங்களுக்கு தொடர்பே இல்லைனு போய்டுவாங்களா... அது மாதிரி எங்களுக்கு இந்த நிலம். நீங்க வாங்கிட்டிங்க..ஆனாலும் இந்த மண் நாங்க புரண்ட மண் இல்லையா... இத உரிமைல சொல்லல.. உழைச்சிருக்கோம்ங்கிற நம்பிக்கையில சொல்றேன் தம்பி.//

    சிந்திக்க வைக்கும் மிகச் சிறப்பான எடுத்துக் காட்டுகள். :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா.

      Delete
  5. உண்மையில் வீட்டைவிட தோட்டம் அழகுதான். புகைப்படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இப்பொழுது எங்கள் வீட்டின் (இப்பொழுது விற்றாயிற்று). நீங்கள் சொன்னது போல் எங்கள் வீட்டுத் தோட்டம் அருமையாக இருக்கும்.

      Delete
  6. ஆஆஆவ்வ்வ்வ் ஜே மாமி.. நான் உங்கட பக்கம் ஒயுங்காத்தானே வந்துகொண்டிருக்கிறென்.. நீங்கதான் இடையில எழுதுவதை நிறுத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்.

    கோபு அண்ணன் பக்கத்திலும் ஒருநாள் உங்கள் கொமெண்ட் பார்த்துக் கேட்டேனே.. பழையபடி முருங்கில் ஏறிட்டாவோ ஜே மாமி என:)... இப்போ போய் அதிரா என் பக்கம் வருவதில்லை என்றால் கர்ர்ர்:) நீங்க போஸ்ட் போட்டால்தானே மீ வருவேன் ஹா ஹா ஹா...

    இன்னொன்று ஜே மாமி, நீங்க படிச்சீங்களோ தெரியாது... இன்னும் ஒரு கிழமையில் நாங்க ஹொலிடே போயிடுவோம்ம்.. அதன்பின் ஓகஸ்ட்டில்தா இப்பக்கம் எல்லாம் வருவேன் என நம்புகிறேன்ன்:).

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஜெயா,

      அதிராவின் வருகை ஆயிரம் பேர்களின் வருகைக்கு சமம்.

      //இன்னும் ஒரு கிழமையில் நாங்க ஹொலிடே போயிடுவோம்ம்.. அதன்பின் ஓகஸ்ட்டில்தா இப்பக்கம் எல்லாம் வருவேன் என நம்புகிறேன்ன்:).//

      ஓகஸ்ட் முதல் ஜெயா நரி முகத்தில் மட்டுமே முழிக்கப்போகிறார்கள் என நான் நம்புகிறேன்.

      ’காலை தூங்கி எழுந்ததும் நரி முகத்தில் முழித்தால் நல்ல அதிர்ஷ்டம்’ என எங்கட மக்களெல்லாம் சொல்லுவினம்.

      யாரும் வேறு ஏதும் அர்த்தம் எடுத்துக்கொள்ளக்கூடாதூஊஊ.
      எதற்கும் முன்னெச்சரிக்கையுடன் சொல்லிட்டேன்.

      Delete
    2. அதிரா, நான் தான் உங்களுக்கு சொல்ல விட்டு விட்டேன்.

      இங்கயும் வாங்க:

      http://aanmiigamanam.blogspot.in/

      இதுவும் என்னுடையது தான். இதுலதான் நிறைய பதிவுகள் போட்டுண்டிருக்கேன்.

      உங்க ஹொலிடே நல்ல முறையில் கழிய என் வாழ்த்துக்கள். நன்னா ENJOY பண்ணுங்கோ. ஓகஸ்டில் தெம்பா வந்து மாமிக்கு நிறைய பதிவு போடுங்கள். லீவில் இருந்தாலும் உங்கள் பக்கத்தில் பதிவுகள் போடுவீர்களா?

      வயசுல சின்னவளாக இருந்தாலும் சீனியர் வலைப்பதிவாளரா மாமி முருங்கை மரத்துல ஏறாம இருக்கணும்ன்னு வாழ்த்துங்கோ அதிரா.

      Delete
    3. //அதிராவின் வருகை ஆயிரம் பேர்களின் வருகைக்கு சமம். //

      பின்ன சும்மாவா. ஆயிரம் பின்னூட்டம் வாங்கும் அபூர்வ சிந்தாமணி அல்லவா நம்ப அதிரா

      Delete
    4. //ஓகஸ்ட் முதல் ஜெயா நரி முகத்தில் மட்டுமே முழிக்கப்போகிறார்கள் என நான் நம்புகிறேன்.

      ’காலை தூங்கி எழுந்ததும் நரி முகத்தில் முழித்தால் நல்ல அதிர்ஷ்டம்’ என எங்கட மக்களெல்லாம் சொல்லுவினம். //

      அப்படி சொல்ல முடியாது கோபு அண்ணா.
      அதிரா எப்பொழுதும் முழிப்பது பூசார் முகத்தில் தான்னு நினைக்கிறேன். அதுவும் அவர்கள் வலைத்தளத்தில் அனுமன் வாலைப் போல் நீண்ட பின்னூட்டங்கள் இடப் படுவதற்குக் காரணமாக இருக்குமோ?

      ஆனால் அதிராவின் வருகை இந்த ஜே மாமிக்கு ரொம்பவே சந்தோஷம்.

      Delete
    5. ஓ ஜே மாமி உங்களுக்கு இன்னொரு புளொக் இருக்கா? சொல்லவே இல்லயே.. எனக்குத் தெரியாதே... கர்:)

      சரி சரி இப்போ நோட் பண்ணிட்டேன்ன்.

      கோபு அண்ணன்கூட இந்த புளொக் பற்றிச் சொல்லல்ல கர்:) அவருக்குப் பொராஆஆஆஆஐ:).. ஹா ஹா ஹா... அந்தாட்டிக்காவில் ஒரு boy நரியாப் பிடிச்சு கோபு அண்ணனுக்கு அனுப்பி வைக்கப்போறேன்ன்:)..

      Delete
    6. இல்ல ஜே மாமி, ஹொலிடேயிலும் புளொக் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தால் அது ஹொலிடேபோல இருக்காது, என்னால படிச்சிட்டு மட்டும் போக முடியாது, படிச்சால் ஏதும் எழுதிடுவேன், பின்பு அதுக்குப் பதில் வந்திருக்கோ எனப் பார்ப்பதிலேயே நேரம் போயிடும்..:) அதனால என் பக்கமும் ஏதும் எழுதப்போவதில்லை.

      அத்தோடு மற்றவர்களிடம் போகாமல் என் புளொக்கை மட்டும் எழுதிக்கொண்டிருக்கும் பழக்கமும் எப்பவும் என்னிடம் இல்லை. நான் எழுதாவிட்டாலும் கிடைக்கும் நேரத்தில் மற்றவர்களிடம் போவதிலேயே என் நேரத்தை செலவழிச்சிடுறேன்ன்ன்...

      “அதிரா ரொம்ப நல்ல பொண்ணு” என நீங்க சொல்வது புரியுது:).. தங்கூ தங்கூ ஜே மாமி:).. கோபு அண்ணன் என்னை நல்ல பொண்ணு எனச் சொல்ல மாட்டார்ர்ர் ஹா ஹா ஹா:).

      Delete
    7. asha bhosle athira June 21, 2017 at 11:34 AM

      //ஓ ஜே மாமி உங்களுக்கு இன்னொரு புளொக் இருக்கா? சொல்லவே இல்லயே.. எனக்குத் தெரியாதே... கர்:)

      சரி சரி இப்போ நோட் பண்ணிட்டேன்ன்.

      கோபு அண்ணன்கூட இந்த புளொக் பற்றிச் சொல்லல்ல கர்:) அவருக்குப் பொராஆஆஆஆஐ:)..//

      அன்புள்ள அதிரா, இந்த ஜெயா மாமிக்கு நிறைய புளொக் இருக்குது. அதுபற்றியெல்லாம் எனக்கே ஒன்றும் தெரியாது. ஏனெனில் இந்த மாமிக்கு ஃபாலோயர் ஜாக்கெட்டே ஏதும் கிடையாது .... ஸாரி டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு. ஃபாலோயர் கேஜட்டே எதுவும் கிடையாது. அதனால் இவர்களின் பதிவுகள் என் டேஷ் போர்டில் தெரியாது. இந்த மாகி பதிவு வெளியிட்டவுடன் எனக்கு மெயிலில் லிங்க் அனுப்புவார்கள். நான் உடனே ஒரே ஓட்டமாக ஓடிப்போய் கமெண்ட்ஸ் கொடுப்பது வழக்கம். என் கமெண்ட்ஸ் அவங்களுக்கு வராட்டி, என் முதுகில் பலமாக வராட்டி தட்டி விடுவார்கள்.

      //ஹா ஹா ஹா... அந்தாட்டிக்காவில் ஒரு boy நரியாப் பிடிச்சு கோபு அண்ணனுக்கு அனுப்பி வைக்கப்போறேன்ன்:)..//

      அதிலும் எதற்கும் பயன்படாத BOY நரிதானா? ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆன GIRL நரியாக இருக்கக்கூடாதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*987654321

      Delete
    8. இந்த மாகி = இந்த மாமீஈஈஈஈஈஈ

      Delete
    9. //கோபு அண்ணன் என்னை நல்ல பொண்ணு எனச் சொல்ல மாட்டார்ர்ர் ஹா ஹா ஹா:).// - அதிரா.

      இந்த பிரபஞ்சத்திலேயே எனக்குத் தெரிந்த ஒரே ஒரு நல்ல பொண்ணு எங்கட ‘அதிரா .... ஸ்வீட் சிக்ஸ்டீன்’ மட்டுமே.

      கடந்த 48 வருடங்களாக இதையே நான் நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருந்து வருகிறேன். ஏனோ உங்களுக்கு இது புரியவே மாட்டேங்குது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*987654321987654321

      Delete
    10. //அந்தாட்டிக்காவில் ஒரு boy நரியாப் பிடிச்சு கோபு அண்ணனுக்கு அனுப்பி வைக்கப்போறேன்ன்:)..//

      ஆனா அண்ணாவுக்கு SWEET SIXTEEN GIRL நரி தான் வேணுமாம்.

      Delete
    11. //ஏனெனில் இந்த மாமிக்கு ஃபாலோயர் ஜாக்கெட்டே ஏதும் கிடையாது ..//

      மாமி கொஞ்சம் மக்கு. இதெல்லாம் இப்பத்தான் படிக்கறேன். விரைவில் FOLLOWER JACKET (!) GADGET வெச்சுடறேன்.

      Delete
    12. //நான் உடனே ஒரே ஓட்டமாக ஓடிப்போய் கமெண்ட்ஸ் கொடுப்பது வழக்கம். என் கமெண்ட்ஸ் அவங்களுக்கு வராட்டி, என் முதுகில் பலமாக வராட்டி தட்டி விடுவார்கள். //

      பாருங்க அதிரா, நான் என் பிள்ளைகளை கூட ஒரு அடி அடிச்சது கிடையாது. என் கையே இன்னும் பிஞ்சுக் கை தான். வராட்டி தட்டற அளவுக்கு முத்தின கை இல்லை. எங்க வீட்டு நாய்க்குட்டி கூட எனக்கு பயப்பட்டதில்லை. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

      Delete
    13. //என்னால படிச்சிட்டு மட்டும் போக முடியாது, படிச்சால் ஏதும் எழுதிடுவேன், பின்பு அதுக்குப் பதில் வந்திருக்கோ எனப் பார்ப்பதிலேயே நேரம் போயிடும்..:) அதனால என் பக்கமும் ஏதும் எழுதப்போவதில்லை.//

      அடடா! இது தெரியாமப் போச்சே. ஹொலிடேஸ் நன்னா ENJOY பண்ணுங்கோ.

      Delete
  7. கதையை ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்ன்.. மிக அருமையா எழுதுறீங்க.. ஒரு கிழமைக்கும் எழுத முடிஞ்சால் நம்ம ஏரியாவுக்கும் எழுதி அனுப்பிடுங்கோ..

    ReplyDelete
    Replies
    1. இது என்னுடைய கதை அல்ல. நம்ம ஏரியாவுக்கு எழுதி அனுப்பறேன்.

      Delete
  8. ///நீங்க மூடுங்க. லேடிஸ் ரஸ்லிங் பாக்கிறதுக்கு சீரியல் தேவல. போய் படுங்க//

    ஹா ஹா ஹா இது யூப்பரூஊஊஊஊ:)..

    இருப்பினும் என்னா தைரியம் தெரியாதோரை வீட்டுக்குள் விட்டு வேலை எல்லாம் செய்ய விட்டிருக்கிறா..

    படிக்க படிக்க.. என்னாகுமோ ஏதாகுமோ என எனக்கு நெஞ்சு பக்குப் பக்கு எண்டு கொண்டே இருந்துது.

    ஆனா முடிவு கேட்க சந்தோசமாகிட்டேன்ன்ன்... அது என்னமோ தெரியல்ல... நம் வீட்டை காணியை வித்தபின், கண்ணில் காணும்போதெல்லாம் கவலை வரும்.. ஒரு தடவை உள்ளே போய்ப் பார்க்கலாமோ என்றெல்லாம் எண்ணத் தோணும்.

    ஊரில் எனில் விக்க மாட்டோம்.. பரம்பரையா இருக்கும்.

    ஆனா வெளிநாடுகளில்.. வாங்குவதும் விற்பதுவும்தானே பெரும்பாலானோருக்கு வேலை.

    அருமையான கதை.

    நீங்களும் மின்னூல் வெளியிடலாமே ஜே மாமி... இன்னொரு ரிவியூ எழுதிக் கல்யாண வீடு நடத்திடுவோம்ம்.. கோபு அண்ணன் துணையோடு.

    ReplyDelete
    Replies
    1. //கண்ணில் காணும்போதெல்லாம் கவலை வரும்.. ஒரு தடவை உள்ளே போய்ப் பார்க்கலாமோ என்றெல்லாம் எண்ணத் தோணும்.//

      இப்ப ஒரு புகைப்படம் சேர்த்திருக்கேன் பாருங்கோ. நாங்கள் 21 வருடம் தாம்பரம் வண்டலூர் அருகே மண்ணிவாக்கம் என்ற இடத்தில் எங்கள் சொந்த வீட்டில் வசித்தோம். 2008ல் அங்கிருந்து ஆதம்பாக்கம் வந்தோம். 2013ல் அந்த வீட்டை விற்று விட்டோம். என் மகள் திருமணமானபின் எங்கள் மாப்பிள்ளையை அழைத்துச் செல்லச் சொல்லி அந்த வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முகநூலில் பதிந்ததும், எங்கள் வீட்டுக்கு வந்தவர்கள், போனவர்கள், உறவுக்காரக் குழந்தைகள், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் என்று அனைவரும் சிலாகித்து எழுதி இருந்தனர்.

      Delete
    2. //நீங்களும் மின்னூல் வெளியிடலாமே ஜே மாமி... இன்னொரு ரிவியூ எழுதிக் கல்யாண வீடு நடத்திடுவோம்ம்.. கோபு அண்ணன் துணையோடு.//

      கண்டிப்பாக. என்னுடைய ஆசை என்னுடைய கதைகளை அதற்கேற்றாற் போல் ஒவ்வொரு கதைக்கும் ஒரு படமாவது எழுதி சேர்க்க வேண்டும் என்பது. அதற்குத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.

      Delete
    3. ஓ படம் பார்த்தேன்... அது உங்கள் மகள் என்பதும் தெரிகிறது.. அப்படியே அம்மா சாயல்:).. நிட்சயம் படம் தேடி எடுங்கோ.. அது ஒன்றும் கஸ்டமில்லயே. கூகிளில் தேடலாமே. அல்லது பொருத்தமாக ஏதும் கண்ணில் பட்டால் பொட்டோ எடுத்திடுங்கோ டக்கென..

      Delete
    4. //நிட்சயம் படம் தேடி எடுங்கோ.. அது ஒன்றும் கஸ்டமில்லயே. கூகிளில் தேடலாமே. அல்லது பொருத்தமாக ஏதும் கண்ணில் பட்டால் பொட்டோ எடுத்திடுங்கோ டக்கென..//

      OK. ஐடியாவிற்கு மிக்க நன்றி.

      Delete
  9. கதை ரொம்பவும் அருமை. உங்கள் மண்ணிவாக்கம் வீடும் அழகு.
    சொந்த வீட்டை விற்றுவிட்டாலும்,அதைவிட வேறு அழகு வீடு வாங்கிிருந்தாலும்,மனதில் நிற்பது முதலாவதே. அன்புடன்

    ReplyDelete