Friday, June 13, 2014
Wednesday, June 11, 2014
அறிமுகம் ஆனால் புதுமுகம் அல்ல
நான் தான், நான் தான், நானே தான்
நான் ஒன்றும் உங்களுக்குப் புது முகம் அல்ல. மணம் (மனம்) வீசும் வலைப்பூ
மூலம் உங்களுக்கு அறிமுகமானவள்தான். வலைத்
தளத்தில் வலம் வந்தவள் தான்.
நடுவுல கொஞ்ச நாள்
காணாமப் போயிட்டேன். மகளின் திருமணம், அலுவலகப்
பணி, இல்லப்பணி, இத்யாதி, இத்யாதி. இப்ப…………….
31.05.2014 அன்று பணி ஓய்வு பெற்று விட்டேன்.
(அதைப் பற்றி தனி இழை போடுகிறேன்).
ஓய்வு அலுவலகப் பணியில் இருந்து மட்டும் தான். அதனால, இல்லப்பணி, பிள்ளைப்பணி (அதுதான் பேத்தி லயாக்குட்டியின் பின் ஓடும், அவள் மழலையை ரசிக்கும், அவளுடன் விளையாடும் அருமையான பணி) இவைகளுடன் முழு மூச்சாய்
என் வலைப்பூவை மீண்டும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறேன்.
என் வலைப்பூ வாசமுள்ள மலர்களைப் போல் மணம் வீச உங்கள் ஆசிகளையும், அன்பான வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்.
என் வலைப்பூவில் தேன் எடுக்க வாருங்கள் என்று உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன்.
என்னுடைய இந்த
வலைப்பூவை ‘கோபு அண்ணா’ என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் ‘வலைப்பூ சக்கரவர்த்தி’
திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)