Wednesday, June 11, 2014

அறிமுகம் ஆனால் புதுமுகம் அல்ல

நான் தான், நான் தான், நானே தான்


நான் ஒன்றும் உங்களுக்குப் புது முகம் அல்ல.  மணம் (மனம்) வீசும் வலைப்பூ மூலம் உங்களுக்கு அறிமுகமானவள்தான்.  வலைத் தளத்தில் வலம் வந்தவள் தான்.

நடுவுல கொஞ்ச நாள் காணாமப் போயிட்டேன்.  மகளின் திருமணம், அலுவலகப் பணி, இல்லப்பணி, இத்யாதி, இத்யாதி.  இப்ப……………. 31.05.2014 அன்று பணி ஓய்வு பெற்று விட்டேன்.  (அதைப் பற்றி தனி இழை போடுகிறேன்).  ஓய்வு அலுவலகப் பணியில் இருந்து மட்டும் தான். அதனால, இல்லப்பணி, பிள்ளைப்பணி (அதுதான் பேத்தி லயாக்குட்டியின் பின் ஓடும், அவள் மழலையை ரசிக்கும், அவளுடன் விளையாடும் அருமையான பணி) இவைகளுடன் முழு மூச்சாய் என் வலைப்பூவை மீண்டும் மணம் வீசச் செய்ய வேண்டும் என்று வந்திருக்கிறேன்.  

 என் வலைப்பூ வாசமுள்ள மலர்களைப் போல் மணம் வீச உங்கள் ஆசிகளையும், அன்பான வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்.
 

என் வலைப்பூவில் தேன் எடுக்க வாருங்கள் என்று உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன். 


என்னுடைய இந்த வலைப்பூவை ‘கோபு அண்ணா’ என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் ‘வலைப்பூ சக்கரவர்த்தி’ 
திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.










10 comments:

  1. வாங்கோ, வாங்கோ, நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.


    >>>>>

    ReplyDelete
  2. //(அதுதான் பேத்தி லயாக்குட்டியின் பின் ஓடும், அவள் மழலையை ரசிக்கும், அவளுடன் விளையாடும் அருமையான பணி) //

    இதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.;)))))

    கொடுத்து வைத்தவள் ........ நீயே ! எனப்பாட்டு பாடுகிறேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தாராளமா பாடுங்கோ. எல்லாம் உங்கள மாதிரி நல்ல உள்ளங்களின் ஆசிகள்தான் காரணம்.

      Delete
  3. வந்துட்டேன் அண்ணா. இனிமே இந்த வலைப்பூவும், நானும் ஓய மாட்டோம். உங்க கிட்ட இருந்து பாராட்டுக்களையும், விருதுகளையும் வாங்கிக் குவிக்கும் வரை. முதல் பின்னூட்டம் உங்களுடையதா இருக்கணும்ன்னு நினைச்சேன். அப்படியே ஆகிவிட்டது.
    நன்றியுடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  4. //என் வலைப்பூ வாசமுள்ள மலர்களைப் போல் மணம் வீச உங்கள் ஆசிகளையும், அன்பான வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன்.//

    சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வாசமுள்ள மலர்கள் தான் தங்களின் வலைப்பூ + பதிவுகள்.. அதன் பெயரே மனம் [மணம்] வீசும் அல்லவா ! ;)

    என் ஆசிகளும் வாழ்த்துகளும் எப்போதும் ‘ஜெ’ க்கு மட்டுமே உண்டு ! ;)))))

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ’இதற்குத்தானே காத்துக் கொண்டிருந்தாய் ஜெயந்தி ரமணி’.

      Delete
  5. //என் வலைப்பூவில் தேன் எடுக்க வாருங்கள் என்று உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணங்கி வரவேற்கிறேன். //

    ஆஹா, அப்படியே ! தாங்கள் இருகரம் கூப்பும் போது புறங்கையையும் நக்குவோம். தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் விடமாட்டான் என்று ஒரு பழமொழியே உள்ளதே ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  6. வேண்டாம் வேண்டாம். பாட்டிலுடன் அனுப்பி விடுகிறேன்.

    ReplyDelete
  7. //என்னுடைய இந்த வலைப்பூவை ‘கோபு அண்ணா’ என்று நாம் அனைவரும் அன்புடன் அழைக்கும் ‘வலைப்பூ சக்கரவர்த்தி’
    திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.//

    ஆஹா, இந்தப்படம் ஏது? என்னைப்போலவே ஒருவர் அங்கு நிற்கிறாரே !
    அந்த அடசல்களையெல்லாம் பார்த்தால் எங்கள் ஆஹம் [வீடு] மாதிரியே உள்ளதே !

    வலதுபுறம் அது யாரு? சமீபத்தில் கல்யாணம் ஆன தங்கள் மகளா ?

    சந்தோஷம். சந்தோஷம். வாழ்க வளமுடனும் + எல்லா நலமுடனும்.

    மிக்க நன்றி.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
  8. எல்லாம் உங்காத்துல எடுத்த போட்டோதான். அடசலா இருந்தாதான் அது வீடு. குழந்தை, குட்டி இல்லாம, மனுஷா புழங்காம இருக்கற வீடு தான் அடசலா இல்லாம இருக்கும். ஒரு நாள் ஆபீசிலிருந்து வீட்டுக்கு வர ஸ்டேஷன்ல காத்துண்டு இருந்த போது ஒரு பெண் தன் தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    ”எங்க வீட்டுக்காரர் வீடு நீட்டா இல்லைன்னு திட்டினார். நான் கேட்டேன், நான் என்ன எக்சிபிஷனா வெச்சிருக்கேன். வீடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று”

    அப்பதான் அடடா இப்படி ஒரு கோணம் இருக்கான்னு யோசிச்சேன்.

    ReplyDelete