நன்றி என்று ஒற்றைச்
சொல்லாக சொல்லி முடிக்க முடியாது. முகப் புத்தகத்திலும்,
கைப்பேசி செய்தியிலும், தொலை பேசியிலும் என் அறுபதாவது பிறந்த நாளுக்கு (29.05.2015) வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என்
மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றி.
என்னுடைய 60வது
பிறந்த நாளுக்கு என் கணவரின் அன்புப் பரிசு.
என் மகன், மகள்,
மருமகள், மருமகன், லயாக்குட்டி எல்லாரும் சேர்ந்து பரிசளித்த தங்க மோதிரம்
என் அம்மா கொடுத்த
500 ரூபாய்க்கு (கண்டிப்பாக ஏதாவது வாங்கிக் கொள் என்ற அன்புக் கட்டளைக்கேற்ப) நான்
வாங்கிக்கொண்ட இரண்டு பருத்திப் புடவைகள்.
பக்கத்து வீட்டு
உமா (நான் மிகவும் மதிக்கும், நேசிக்கும் பெண்மணி) அளித்த அன்புப் பரிசு.
மாமியார் கொடுத்த
100 ரூபாயை அப்படியே வைத்திருக்கிறேன்.
இது எல்லாவற்றையும்
விட எனக்குக் கிடைத்த விலை மதிப்பில்லாத ஒரு பரிசு எங்கள் பேத்தி லயாக்குட்டியின் அன்பு
முத்தங்கள். நான் அவளிடம் எனக்குக் கிடைத்த
பிறந்த நாள் பரிசிலேயே மிகச் சிறந்தது அவளின் முத்தங்கள் தான் என்று சொன்னேன். அன்று
முழுவதும் அவள் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை ‘பாட்டி, உனக்கு எது BEST GIFT’ என்று கேட்டாள். ‘உன் முத்தங்கள்தான்’ என்று சொன்னதும் ரசித்து,
ரசித்து சிரித்தாள்.
இதை விட என்ன பெரியதொரு
பரிசு இருக்கப் போகிறது.
GOD IS SO GREAT
60 முடிந்து
61ல் மகிழ்ச்சியாகக் காலடி எடுத்து வைத்திருக்கிறேன் உங்கள் அன்பான வாழ்த்துக்களுடன்.
இந்தப்பதிவினைப் பார்க்கவும் படிக்கவும் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.
ReplyDelete60 முடிந்து 61ல் காலடி எடுத்து வைத்துள்ள என் அன்புச் சகோதரி ஜெயாவுக்கு, 65 முடிந்து 66ல் காலடி எடுத்து வைத்துள்ள கோபு அண்ணாவின் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என்றும் இன்று போல இன்பமாக, இனிமையாக சந்தோஷமாக வாழ்க்கை அமையட்டும். :) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
மீண்டும் வருவேன் :)
//என்னுடைய 60வது பிறந்த நாளுக்கு என் கணவரின் அன்புப் பரிசு.//
ReplyDelete//என் அம்மா கொடுத்த 500 ரூபாய்க்கு (கண்டிப்பாக ஏதாவது வாங்கிக் கொள் என்ற அன்புக் கட்டளைக்கேற்ப) நான் வாங்கிக்கொண்ட இரண்டு பருத்திப் புடவைகள்.//
//என் மகன், மகள், மருமகள், மருமகன், லயாக்குட்டி எல்லாரும் சேர்ந்து பரிசளித்த தங்க மோதிரம்//
ஆஹா, இவை அனைத்தும் ஒவ்வொன்றாக அணிந்துகொண்டு அடுத்து அடுத்து நான்கு பதிவுகள் தந்து அசத்தலாமே !
// பக்கத்து வீட்டு உமா (நான் மிகவும் மதிக்கும், நேசிக்கும் பெண்மணி) அளித்த அன்புப் பரிசு.//
ReplyDeleteஅந்தப்பிள்ளையார் படா ஸ்டைலாக [என்னைப்போலவே] ஒய்யாரமாக திண்டினில் சாய்ந்து படுத்துக்கொண்டுள்ளார். :) அருமையான பரிசு ! அதனை அளித்துச் சிறப்பித்தவருக்கும் என் நன்றிகள்.
//அன்று முழுவதும் அவள் ஐந்து நிமிடங்களுக்கொரு முறை ‘பாட்டி, உனக்கு எது BEST GIFT’ என்று கேட்டாள். ‘உன் முத்தங்கள்தான்’ என்று சொன்னதும் ரசித்து, ரசித்து சிரித்தாள். இதை விட என்ன பெரியதொரு பரிசு இருக்கப் போகிறது. //
ReplyDeleteஉண்மை தான். அதற்கு ஈடு இணை எதுவுமே கிடையாதுதான்.
பாசமுள்ள பாட்டி ஜெயாவுக்கும், பட்டுக்குட்டி, செல்லக்குட்டி, பட்டுத்தங்கம் ’லயாக்குட்டி’க்கும் என் மனமார்ந்த நல்லாசிகள்.
வாழ்க வளமுடனும், நலமுடனும்.
பொருத்தமான படங்களுடன் கூடிய மிக அழகான பதிவுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.
ReplyDeleteபிரியமுள்ள கோபு அண்ணா