இந்த தமிழ்ப் புத்தாண்டு
எனக்கு ஒரு மிகவும் சிறப்பான ஆண்டாகும்.
இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே. ஆக இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம் நாள் பூர
நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60 முடிந்து 61 தொடங்கப்
போகிறது. இப்ப சொல்லுங்க இந்த மன்மத வருடம்
எனக்கு ரொம்ப சிறப்பானதுதானே.
மீள் பதிவு.
புத்தாண்டு பிறக்குது
புத்தாண்டு பிறக்குது
முன்னே வைக்கின்றேன்
முடிந்தால் நிறைவேற்றிடு
முழு முதற் கடவுளே – முடிந்தால்
முழுவதும் நிறைவேற்றிவிடு.
மொழிச்சண்டை,
மதச்சண்டை,
ஜாதிச்சண்டை,
அண்டை, அயல் நாட்டுச் சண்டை
எல்லா சண்டைகளையும்
அறவே ஒழித்திடு.
கொலை, களவு, கற்பழிப்பு,
நம்பிக்கைத் துரோகம், தீவிரவாதம்
நச்சென்று நசுக்கி
நலம் கெட்டுப்போகவை.
நீ கொடுத்த இன்னுயிரை
தானே அழிக்கும்
தரங்கெட்ட செயலை
தப்பாமல் மாற்றிடு.
பிறர் பொருள்,
பிறர் மனை கவரும்
பேராசையை
கட்டாயம் விரட்டி விடு.
பிச்சையில்லா பாரதம்
நிச்சயம் உருவாக்கிடு
உழைப்பின் உயர்வு,
உயிரின் விலை,
புரியாதவர்களுக்குப்
புரிய வைத்திடு.
முட்டாள் மனிதனை
மூளைச் சலவை செய்தாவது
முடிந்தவரை நிறைவேற்றிடு.
//இந்த தமிழ்ப் புத்தாண்டு எனக்கு ஒரு மிகவும் சிறப்பான ஆண்டாகும்.//
ReplyDeleteஉங்களுக்கு மட்டுமல்ல ..... இந்த லோகத்தில் உள்ள அனைவருக்குமே !
//இருக்காதா பின்னே. அறுபது ஆண்டுகளுக்கு முன் நான் அவதரித்த (!!!) ஆண்டாயிற்றே.//
அதனால் மட்டுமே இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாகத் தோன்றுகிறது, எனக்கு.
//ஆக இந்த மன்மத ஆண்டு வைகாசி மாதம் 12 ம் நாள் பூர நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் (26.05.2015) எனக்கு அகவை 60 முடிந்து 61 தொடங்கப் போகிறது.//
மிகவும் சந்தோஷம். மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
பூரமா ? அதனால் தான் பூராண் போல நல்ல சுறுசுறுப்பாக இருக்கீங்கோ.:)
// இப்ப சொல்லுங்க இந்த மன்மத வருடம் எனக்கு ரொம்ப சிறப்பானதுதானே.//
நிச்சயமாக ! பாராட்டுகள். வாழ்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
நட்புடன் பிரியமுள்ள கோபு
அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் தளத்தின் ஒரு சில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (04.06.15) அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + இனிய நல் வாழ்த்துக்கள்.
வலைச்சர இணைப்பு இதோ:
http://blogintamil.blogspot.in/2015/06/4.html
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (04/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/blog-post.html
திருமதி. ஜெயந்தி ஜெயா அவர்கள்
வலைத்தளம்:
மனம் [மணம்] வீசும்
மணம் [மனம்] வீசும்
ஆன்மீக மணம் வீசும்
http://manammanamviisum.blogspot.in/2013/02/blog-post_13.html
அரேபியாவில் ஆடு மேய்த்தவர்
(வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)
http://manammanamveesum.blogspot.in/2015/04/blog-post.html
மன்மத ஆண்டே வருக வருக !
http://aanmiigamanam.blogspot.in/2015/02/blog-post_16.html
எங்கள் வீட்டில் சிவபூஜை
http://manammanamveesum.blogspot.in/2015/01/blog-post_27.html
கோட்டை இங்கே கோவில் அங்கே
http://manammanamviisum.blogspot.in/2013/01/blog-post_5016.html
http://manammanamviisum.blogspot.in/2013/07/blog-post.html
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
http://manammanamviisum.blogspot.in/2012/12/blog-post_11.html
பரிசுக்குத்தேர்வான ’காவல்’ சிறுகதை
http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
அண்ணா வீடு எங்கே, இன்னும் கொஞ்சம் தூரம்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
அன்புடையீர்,
ReplyDeleteவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/4.html
வலைச்சரம் மூலமாகத் தங்களை இன்று தொடரும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள். எனது வலைத்தளங்களைக் காண அன்போடு அழைக்கிறேன்.
ReplyDeletehttp://www.drbjambulingam.blogspot.com/
http://www.drbjambulingam.blogspot.com/