Saturday, May 28, 2016

என் இனிய இலங்கைப் பயணம் பகுதி 1

எனது பிறந்த நாளான இன்று (29.05.2016) ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கிறேன்.  
என்ன செய்ய.  
குடும்பத் தலைவின்னா சும்மாவா?   
சரி இனி நிறைய எழுதணும்ன்னு வாழ்த்துங்கள்.


முதல் வெளிநாட்டுப் பயணம்




சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது மாம்பலத்தில் இருந்து 5B பேருந்தைப் பிடித்து திருமயிலை செல்வது போல் இருக்கலாம்.  ஆனால் எங்களைப்போல் வெளிநாட்டுப் பயணம் வாய்க்குமா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு…………   ரொம்பவும் ஆர்வமும், எதிர்பார்ப்பும் இருக்கத்தானே செய்யும்.  (PASSPORTஏ இப்பதானே எடுத்தோம்).  கடல்கடந்து ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன் அந்தமானுக்கு.  அதுவும் நம் நாட்டைச் சேர்ந்ததுதானே.   5 நாட்கள் இலங்கைப் பயணம் ஒன்று ஏற்பாடு செய்தோம்.   ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்த நாள் வந்தது,
(இதுக்கே இப்படீன்னா….)

மே மாதம் 3ம் தேதி காலை 10 மணி விமானத்தில் நானும் என் கணவரும் புறப்படத் தயாராகி விட்டோம்.   10 மணி விமானத்திற்கு காலை 7 மணிக்கே கிளம்பி விட்டோம். மகன் விமான நிலைத்தில் கொண்டு விட்டு விட்டுச் சென்றான்.CHECK IN முடிந்து EMIGRATION க்கு சென்றோம்.  CHECK IN க்யூவில் நிற்கும் போதே என் கணவர், ’பாரு, நீ வெச்சிருக்கற இட்லி பொட்டலம், தண்ணி பாட்டில் எல்லாம் குப்பைத் தொட்டிக்குதான் போகப் போறது.  இதெல்லாம் வேண்டாம்ன்னா கேக்கறயா, தண்ணியையாவது குடிச்சு காலி பண்ணு’.  என்றார்.   நான் பதிலே சொல்லலை.  IMIGRATION முடிந்து இட்லி சகிதமாக இடம் தேடி உட்கார்ந்து காலை சிற்றுண்டியை 9 மணிக்கு முடித்துக் கொண்டோம்.

 நாங்கள் பயணித்த விமானம்









ம்ம்ம். விமானத்தில் ஏறியாச்சு.  அழகான புடவைக்கட்டுடன் விமானப் பணிப் பெண்கள்.  ’AYU BOWAN’  (LONG LIVE என்று அர்த்தமாம்) வரவேற்றார்கள். 




நம்ப மதுரைப் பக்கம் எல்லாம் பின் கொசுவம் வைத்துக் கட்டுவார்களே, கொஞ்சம் அதுக்கு தங்கச்சி மாதிரி ஒரு கட்டு.  எனக்கு ரொம்பப் பிடித்தது.  மீண்டும் ஒரு முறை இலங்கைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் (ஆசையைப் பார்ரா) கண்டிப்பாக அவர்கள் மாதிரி புடைவை கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

சிறுவர், சிறுமியருக்கு வரை புத்தகமும் வண்ண பென்சில்களும் அடங்கிய ஒரு உரையை கொடுத்தார் விமானப் பணிப்பெண்.  


அட இந்த சிறுமி அதை வாங்கி அழகாக வைக்கிறாள் பாருங்கள்.




மிகவும் சிறிய குழந்தைகளுக்கு SOFT TOYS கொடுப்பார்களாம்.  (எல்லா அயல் நாடு செல்லும் விமானங்களிலும் இப்படி கொடுப்பார்களாமே– இப்ப தானே நமக்கு தெரியறது).

எங்களுக்கும் குடுத்தாங்க.  அதை ஏன் கேக்கறீங்க.  பொங்கல் மாதிரி, அரிசியும், முழுப்பயறும் போட்டு வேக வைத்து தட்டில் கொட்டி பெரிய வில்லைகளாக.  நீங்க எதிர்பார்க்கற மாதிரி இல்லீங்க.  மிளகு, சீரகம், முந்திரி, இஞ்சி, கறிவேப்பிலை இதெல்லாம் மருந்துக்குக் கூட இல்ல.  அதான் சொன்னேனே பொங்கல் மாதிரின்னு.  ம்ம்ம்ம். அதுக்கு தொட்டுக்கு அது அதை விட அருமை.  வெங்காயம், புளி, உப்பு அவ்வளவுதான்.  (வெந்ததுதான் பச்சையாக இல்லை). அப்புறம், ஒரு கப்பில்  யோகர்ட் – அதான் தயிரில் சர்க்கரை போட்டு,  அப்புறம், காபி அல்லது டீ,  ஒரு கப்பில் சர்க்கரை, பால் பொடி, போட்டுக்கொண்டால் அவர்கள் காபி அல்லது டீ டிகாக்க்ஷனை சுடச்சுட ஊற்றுகிறார்கள்.   ரொம்ப கஷ்டப்பட்டு அந்த பொங்கல் மாதிரியை முழுங்கி வெச்சேன்.  தொட்டுக்க வைத்ததை தொடவே இல்லை.   கொஞ்சம் வலது பக்கம் திரும்பிப் பாத்தா நம்பாளு (அதான் என்ற ஊட்டுக்காரர்) சாப்பிட்டு முடிச்சுட்டார்.  ஏங்க வீட்டுல உப்பு கம்மி, காரம் கம்மி, 33 வருஷமா என்ன சமைக்கிறன்னு அப்பப்ப நக்கீரரா இருக்கறவரு இங்க பாத்தா கப்பு சிப்பு.  ம்  தட்டு காலி.  நான் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பு,  நம்ப அருமை தெரியறதுக்காகவே இவங்கள வெளியில இந்த மாதிரி அடிக்கடி கூட்டிக்கிட்டுப் போகணும்.   

ஒன்றரை மணி நேர பயணம் என்றார்கள்.  ஒரு மணி நேரத்திலேயே கொழும்பு விமான நிலையம் சென்று அடைந்து விட்டது விமானம்.    

வெளியே வந்து  EMIGRATION வரிசைக்கு சென்ற போது, எங்களைப் பார்த்த உடனே இந்திய PASSPORT இருந்தால் FORM வேண்டாம்.  PASSPORT மட்டும் காண்பித்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள்.   பார்ரா நம்ப PASSPORTக்கு இருக்கற மரியாதையை என்று பெருமிதப்பட்டுக் கொண்டேன்.  
உள்ளுக்குள் கொஞ்சம் பயம், ஒருவேளை நம்மை அழைத்துச் செல்ல யாரும் வராவிட்டால்.   மகனிடம் கிளம்பும் போதே சொல்லி வைத்திருந்தேன்.  MEETING அது இது என்று பார்க்கவில்லை என்று சொல்லக்கூடாது.  1130 மணியிலிருந்து WHATSAPP ஐயே பார்த்துக் கொண்டிரு என்று.   அவன் எல்லாம் கண்டிப்பா வருவா போம்மா என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.   வெளியில் வந்ததும் PLACARD வைத்துக் கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டே வந்தோம்.  நல்லவேளை என்னவரின் பெயர் கொண்ட பதாகையைப் பார்த்ததும் அப்பாடா என்றாயிற்று.  (பதாகை – பார்த்தீங்களா, இலங்கைக்குள் காலடி வைத்ததும் என்ன மாதிரி தூய தமிழ் வருது பாருங்க.  ஆமாம்.  அவங்க தமிழ் என்ன ஒரு அழகு).   

திரு மாலிக், ஓட்டுனர் மகிழுந்துடன் எங்களுக்காகக் காத்திருந்தார்.  

வெளியே வந்து மகிழுந்துக்காகக் காத்துக் கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.  




என்னவர் 


BANK OF CEYLON ல் டாலர்களைக் கொடுத்து இலங்கைப் பணமாக மாற்றிக் கொண்டு மகிழுந்தில் ஏறி அமர்ந்தோம். 

தொடரும்..............

28 comments:

  1. தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். மனம் நிறைந்த நல்லாசிகள்.

    சென்ற பிறந்தநாளின் போது ’லயா’வின் பாட்டியாக மட்டுமே இருந்த நீங்கள், இப்போது மீண்டும் ஒருத்திக்குப் பாட்டியாகிட்டீங்கோ.

    எவ்வளவு முறை பாட்டியானாலும் உங்களுக்கு இளமையும் எழுச்சியும் குறையவே இல்லை.

    அதனால் இப்போகூட ஹனிமூன் கிளம்பிட்டீங்கோ. வாழ்த்துகள். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. சிரம் தாழ்ந்த நன்றி கோபு அண்ணா.

      உங்கள் ஆசீர்வாதத்தால் அடுத்த பிறந்த நாளுக்குள் சந்தியாவுக்கும் ஒரு குழந்தை பிறந்து மீண்டும் பாட்டி ஆகிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்.

      //எவ்வளவு முறை பாட்டியானாலும் உங்களுக்கு இளமையும் எழுச்சியும் குறையவே இல்லை. //

      என்ன வெச்சு காமெடி, கீமெடி ஒண்ணும் பண்ணலியே.

      இருந்தாலும் இளமையெல்லாம் BYE BYE சொல்லிட்டு போயாச்சு கோபு அண்ணா. இப்ப நெனப்புதான் பொழப்ப கெடுக்குது.

      ஹனிமூன் இல்ல இது மினிமூன்

      Delete
    2. //உங்கள் ஆசீர்வாதத்தால் அடுத்த பிறந்த நாளுக்குள் சந்தியாவுக்கும் ஒரு குழந்தை பிறந்து மீண்டும் பாட்டி ஆகிவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்.//

      பகவத் க்ருபையால் ’நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும்’. கவலையே படாதீங்கோ. பகவானை நம்புங்கோ. அவனை மட்டுமே தீவிரமாக சரணடையுங்கோ.

      எங்கள் ஆசிகளும் எப்போதும் தங்களுக்கு உண்டு.

      Delete
  2. அருமையான பயணக்கட்டுரை. அழகாக ஆங்காங்கே நகைச்சுவையாக எழுதி அசத்தியுள்ளீர்கள்.

    சிரித்துக்கொண்டே நான் ஒருமுறை தனியாகப் படித்தேன். பிறகு மன்னிக்காக ஒருமுறை உரக்கப்படித்துக் காட்டினேன். இருவரும் சிரித்துக்கொண்டோம்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. அசத்தி இருக்கேனா?
      ஏதோ பூவுடன் சேர்ந்த நார் போல உங்க எழுத்தெல்லாம் படிச்சு கொஞ்சம் .........

      உங்க சிரிப்பு வெடி சிரிப்பு. மன்னி அழகா, புன்னகையா சிரிச்சிருப்பா. மன்னிக்கு என் நன்றியை சொல்லிடுங்கோ.

      Delete
  3. ப்ளேனில் தரும் உணவுகளெல்லாம் அபர தண்டமாகும். எதையும் நம் வாயில் வைக்கவே முடியாது. சுவையும் கிடையாது. போதுமான அளவும் இருக்காது.

    ஆத்திலிருந்து கொண்டுபோகும் புளியஞ்சாதம், பொறித்த வடாம், அரிசி அப்பளாம், தயிர் சாதம், ஊறுகாய் எண்ணெய் மிளகாய்ப்பொடியில் தோய்த்த ஸ்பாஞ்ச் போன்ற இட்லிகள் போலெல்லம் வரவே வராது. நான் அவையெல்லாம் இல்லாமல் எங்குமே பயணம் கிளம்புவது இல்லை. :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ப்ளேனில் மட்டும் இல்ல. நம்பள மாதிரி நாக்கு நீண்ட தேவதைக்கெல்லாம் ஹோட்டல் சாப்பாடும் பிடிக்கவே பிடிக்காது.

      அதான் மீனம்பாக்கம் விமான நிலையத்தில உக்காந்து நன்னா இட்லி, மிளமாப்பொடியை ஒரு வெட்டு வெட்டிட்டோமே.

      Delete
  4. //நம்ப மதுரைப் பக்கம் எல்லாம் பின் கொசுவம் வைத்துக் கட்டுவார்களே, கொஞ்சம் அதுக்கு தங்கச்சி மாதிரி ஒரு கட்டு. எனக்கு ரொம்பப் பிடித்தது. மீண்டும் ஒரு முறை இலங்கைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தால் (ஆசையைப் பார்ரா) கண்டிப்பாக அவர்கள் மாதிரி புடைவை கட்டிக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முறை வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.//

    அது கிடக்கட்டும். ஏகப்பட்ட போட்டோக்கள் காட்டியுள்ளீர்கள். ஆனாக்க உங்க போட்டோ ஒன்னுகூட காணவில்லையே :(((((( தங்கள் பயணம் புடவையுடனா அல்லது சூடிதார் அல்லது சல்வார் போன்றவைகளுடனா என எப்படி நாங்கள் தெரிந்துகொள்வது ??????

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வரும் வரும் அது வரும் வரை சற்றுப் பொறும், பொறும்.

      புடைவை மட்டும்தான். பழைய ஜெயாவுக்கு சூடிதார், சல்வார் எல்லாம் நன்னா இருக்கும். இப்ப சுத்தளவு அதிகமாயிடுத்து. அதனால ONLY புடைவை, புடைவை, புடைவை

      Delete
    2. ///வரும் வரும் அது வரும் வரை சற்றுப் பொறும், பொறும்.//

      சரி, சரி. ஸாரி ..... ஸாரி :) அவசரப்பட்டுட்டேன் ஸாரி எனத் தெரிந்துகொண்டும் விட்டேன்.

      ’சுத்தளவு’ உங்களைப் போல மூன்று பங்கு எனக்கிருப்பதால்
      ...... வேண்டாம் ...... வேண்டாம் .. இனி நான் எதுவும் சொல்றாப் போல இல்லை. :)

      Delete
  5. சிலோனில் தங்களுக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா? ஏன் திடீரென்று இந்த சிலோன் பயணம்? தெரிந்துகொள்ள ஆவலுடன்.

    பயணக்கட்டுரை மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு அண்ணா + மன்னி.

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும். உறவுக்காரங்க யாரும் இல்ல. இந்த சிறிசேனாவை தெரியும், முத்தையா முரளிதரனை தெரியும், ஆனா இவங்களுக்கெல்லாம் சத்தியமா நான் யாருன்னே தெரியாது.

      இப்ப சத்தியத்துக்கு அங்கதான் போக முடிஞ்சது. MAKE MY TRIP ல BOOK பண்ணி போனோம்.


      // பயணக்கட்டுரை மென்மேலும் தொடரட்டும். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் கோபு அண்ணா + மன்னி.//

      இத அங்க இருந்தே என் மண்டையில ஒரு கொட்டு கொட்டி தினமும் சொல்லுங்கோ.

      நன்றியுடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  6. //ஒன்றரை மணி நேர பயணம் என்றார்கள். ஒரு மணி நேரத்திலேயே கொழும்பு விமான நிலையம் சென்று அடைந்து விட்டது விமானம்.//

    அடடா, நீங்க அடுத்த அரை மணி நேரமும் கீழே இறங்காமல் விமானத்திலேயே அமர்ந்துகொண்டு அடம் பிடித்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு முன்னாடி விமானப் பணிப் பெண்கள் எல்லாம் வெளியில வந்து வீட்டுக்குப் போக காத்திருக்காங்க பாருங்க. அப்படியே அடம் பிடிச்சாலும் குண்டுக் கட்டா தூக்கி வெளியில போட்டுட மாட்டாங்களா?

      Delete
  7. //(பதாகை – பார்த்தீங்களா, இலங்கைக்குள் காலடி வைத்ததும் என்ன மாதிரி தூய தமிழ் வருது பாருங்க. ஆமாம். அவங்க தமிழ் என்ன ஒரு அழகு).//

    இதை நானும் அவதானித்தேன் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றாகக் கதைக்கிறீர்கள் அண்ணா

      Delete
    2. Jayanthi Jaya May 29, 2016 at 10:17 PM
      நன்றாகக் கதைக்கிறீர்கள் அண்ணா//

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

      நம் அதிரா போன்ற சிலருடன் பழகியதால் ஒருசில புதிய வார்த்தைகள் இதுபோல ஏற்கனவே கேட்டுப் பழகியுள்ளேன்.

      Delete
  8. பயண அனுபவத் துவக்கம் அருமை. தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி Dr B Jambulingam சார்.

      Delete
  9. வணக்கம் ஜெயந்தி மேடம்.. இதுயாரு புதுசா கடல்ல தோன்றிய முத்தா இருக்கேன்னு.. நினைக்கிறீங்களா.. ஒங்கட கோபு அண்ணனுக்கு நான் சமீபமா ஃப்ரெண்ட் ஆகியிருக்கிறேன்.. அவங்கதான் ஒங்கட லிங்க் தந்து இங்க வர சொன்னாங்க.. பயணக்கட்டுரை வெரி இன்ட்ரஸ்டிங்க்..நானும் வலைப்பதிவுங்கற பேருல பல பாஷை சினிமா பாடல்களாக போட்டு கலாச்சிங்க்... அங்க வந்து உங்கட கோபு அண்ணன் பண்ணுற அலப்பரைய பாருங்க.. அங்க நாங்க நாலஞ்சு பேராகத்தான் கும்மி கோலாட்டம் போட்டுகிட்டிருக்கோம்.. ஒரு கை குறையுது...)))) வந்து கை கொடுங்கள்..நீங்களும் என்ஜாய் பண்ணுவிங்க...

    ReplyDelete
    Replies
    1. வாராய் என் தோழி வாராயோ
      வலைத்தளத்துக்கு வாழ்த்த வந்தாயோ
      என் வலைத்தளத்துக்கு வாழ்த்து வந்தாயோ

      வாழ்த்த வந்ததற்கு மிக்க நன்றி.

      நானும் வாரேன் உங்க வலைத்தளத்துக்கு
      முத்தெடுக்கத்தான்

      //அங்க நாங்க நாலஞ்சு பேராகத்தான் கும்மி கோலாட்டம் போட்டுகிட்டிருக்கோம்..//

      ம்ம்ம்ம்ம். இங்கன கோபு அண்ணன் மட்டும்தேன். அழுவாச்சியா இருந்துச்சு. நீங்க வந்துட்டீங்க.

      கும்மி, கோலாட்டம் என்ன, குச்சுப்பிடி, கதக்களி, ஒடிசி, மோகினி ஆட்டம், பரத நாட்டியம் எல்லாம் ஜமாய்ச்சுடுவோம்.



      Delete
    2. சிப்பிக்குள் முத்து. May 30, 2016 at 9:42 PM

      //ஒங்கட கோபு அண்ணனுக்கு நான் சமீபமா ஃப்ரெண்ட் ஆகியிருக்கிறேன்.. அவங்கதான் ஒங்கட லிங்க் தந்து இங்க வர சொன்னாங்க..//

      அச்சச்சோ .... போச்சு, போச்சு, போச்சு .... :) இப்படி ஒரேயடியா உண்மையை உண்மையாய்ச் சொல்லலாமா, முன்னாக்குட்டி?

      //நானும் வலைப்பதிவுங்கற பேருல பல பாஷை சினிமா பாடல்களாக போட்டு கலாச்சிங்க்...//

      தமிழ் பாட்டு மட்டுமே இவள் (சிப்பிக்குள் முத்து - முன்னா - முன்னாக்குட்டி - மெஹ்ருன்னிஸா) தானே சொந்தமாகப் போடுவாள், ஜெயா.

      மற்ற பாஷைப் பாடல்களைப்போட இவளுக்கு இடுப்புப்பிடித்துவிட வேறொருத்தி இருக்காள். என்னைப் பொறுத்தவரை, அவள் எனக்கு மிகவும் டேஞ்ஜரஸ் பெர்சன். என்ன சொல்வேன் ... அதை எப்படிச் சொல்வேன் ... என்னவோ போங்கோ .... அவள் எனக்கு ஒரு SILENT KILLER :)))))

      //அங்க வந்து உங்கட கோபு அண்ணன் பண்ணுற அலப்பரைய பாருங்க..//

      அச்சச்சோ, தங்கமான என் தங்கச்சியிடம் போய், இப்படி அவளின் அன்புக்குரிய ’கோபு அண்ணாவைப்பற்றி’ வத்தி வெச்சுட்டையே, முன்னா !!!!!

      [ வத்தி வெச்சுடயே .... பரட்டை .... 16 வயதினிலே படத்தில் ரஜினியிடம் சொல்லும் டயலாக் போல இதைப் படிக்கணும். :))))) ]

      //அங்க நாங்க நாலஞ்சு பேராகத்தான் கும்மி கோலாட்டம் போட்டுகிட்டிருக்கோம்.. ஒரு கை குறையுது...)))) வந்து கை கொடுங்கள்..நீங்களும் என்ஜாய் பண்ணுவிங்க...//

      அதெல்லாம் எங்கட ஜெயாவும் மிகவும் ஜாலியா கும்மி அடிச்சு கோலாட்டமே போடுவா. கவலையே வேண்டாம். :)

      Delete
  10. ஆண்டி வந்து பிட்டனே.... பயண கட்டுரை சூப்பரு பின்கொசவம் வச்சி சேல கட்டுதுன்னா இன்னா????? வெளங்கலியே.... அட கொப்புரான... எனக்கு முன்ன கூட்டியே முன்னா குருஜி வந்து போட்டாகளா...... அப்பாலிக்கா நா லேட்டூஊஊஊஊஊ.

    ReplyDelete
    Replies
    1. வாம்மா மின்னல்.

      வந்ததுக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி கண்ணு.
      அப்பப்ப என்னோட வலை வீட்டுக்கு வந்துட்டுப் போம்மா.

      //பின்கொசவம் வச்சி சேல கட்டுதுன்னா இன்னா????? //

      பழைய தமிழ் சினிமாவில எல்லாம் பார்த்ததில்லயா? எவ்வளவு கதாநாயகிகள் இப்படி கட்டிக்கொண்டு எவ்வளவு பாட்டுக்கு மரத்தை எல்லாம் சுத்தி, சுத்தி வந்து நடனமாடி இருக்காங்க.

      குருஜி இங்கன வாராம இருக்க முடியுமா? முதல் INVITATION அண்ணாவுக்குத் தானே.

      Delete
    2. அவுரு கூட நமெல்லாம் போட்டியே போட முடியாது. அதனால்தான அவருக்கு ‘பின்னூட்டப்புயல்’ன்னு ஒரு பட்டப்பெயரை நான் கொடுத்திருக்கேன்.

      ம்ம்ம்ம்ம். நாமெல்லாம் ஜுஜுபி.

      Delete
  11. ஜெயந்தி மேடம்..... கோபூஜி.. மூணு நாளா என் பதிவு பக்கம் வரவே இல்ல... நான் பதிவு போட்ட ஒருமணி நேரத்துக்குள்ள வந்து சூப்பரா கமெண்டும் போட்டு முழு பாடலையும் போட்டு கலகலப்பா இருப்பாக.. இப்ப மூணு நாளா வரலைனதும் கவலையா இருக்குது.. அவங்களுக்கு உடம்புக்கு சுகமில்லையா வீட்ல வேர ஏதானும் ப்ராப்லமா...ஏன் உங்க கிட்ட கேக்குறேன்னா நீங்க அவங்ககூட ரொம்ப வருஷமா பழக்கம்.. அவங்க வீட்டுக்கெல்லாம்போயி சந்திச்சிருக்கீங்க.. ஏன் அவங்க வரலைனு உங்க கிட்ட கேக்கலாம்னு நெனச்சேன்.. தப்பா நெனக்காதிங்க.. எங்களுக்கெல்லாம் ரொம்ப கவலையா இருக்கு.. உங்களுக்கு தெரிஞ்சிருந்தா என் பக்கம் வந்து கமெண்டுல ரிப்ளை பண்ணமுடியுமா... ப்ளீஸ்... மேடம்...

    ReplyDelete
    Replies
    1. சிப்பிக்குள் முத்து. June 5, 2016 at 10:43 PM

      //ஜெயந்தி மேடம்..... கோபூஜி.. மூணு நாளா என் பதிவு பக்கம் வரவே இல்ல... நான் பதிவு போட்ட ஒருமணி நேரத்துக்குள்ள வந்து சூப்பரா கமெண்டும் போட்டு முழு பாடலையும் போட்டு கலகலப்பா இருப்பாக.. இப்ப மூணு நாளா வரலைனதும் கவலையா இருக்குது.. //

      என்னைக் காணுமே என்று தேடவும், இந்த உலகில் எப்போதுமே ஒரு நான்கு பெண்குட்டிகளாவது, என் நலம் விரும்பிகளாக இருப்பது கேட்க, சற்றே என் மனதுக்கு ஓர் ஆறுதலாக உள்ளது.

      உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், முன்னாக்குட்டி.

      ’புடுச்சாலும் புடுச்சா புளியங்கொம்பாக.....’ என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க.

      அதுபோல நீங்க எங்கட ஜெயாவைப் பிடிச்சுட்டீங்களே, முன்னா. சபாஷ். பாராட்டுகள். :)

      Delete