Wednesday, December 31, 2014

புத்தாண்டின் முதல் கவிதை


 இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன் இன்று 
முதல் கவிதை துவக்கம்.  
மேன் மேலும் பதிவுகள் போட உங்கள் அனைவரின் (முக்கியமாக கோபு அண்ணா) வாழ்த்துக்கள் எனக்கு அவசியம் நட்புக்களே.

வாழ்க வளமுடன்.



நாய்க்குட்டி,
ஒட்டகச் சிவிங்கி,
அவளின் மனம் கவர்ந்த
குட்டிக்கரடி, 
பந்து,
இன்னும் பல
பொம்மைகள் இருந்தாலும்
அவள் இலக்கு
என்னமோ
அடுக்களை தான்,
அடுக்களையில் இருக்கும்
அஞ்சரைப் பெட்டிதான்.

கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணில் மண்ணைத் தூவி
கலப்படம் செய்து விட்டாள்

 

பாட்டிக்கு தாளிக்க
ஒவ்வொன்றாய் எடுக்கும்
சிரமம் வேண்டாம் என்றோ?

கண்டிக்க மனம் இல்லாமல்
கண்டிக்க நினைத்தாலும்
இரு கன்னம் குழிய சிரித்து
மயக்கி விடுகிறாள்

என் இரு கன்னத்தில்
முத்தமிட்டு
கோப சுரத்தின்
வேகத்தைக் குறைத்து விடுகிறாள்.

கண்டிப்பதெங்கே
ரசிக்கவே செய்கிறேன்
அவள் செய்யும்
குறும்புகளை






6 comments:

  1. குழந்தைகளே அப்படித்தான். நாம் எவ்வளவு விலை ஜாஸ்தியாகப் பொம்மைகள் வாங்கிப்போட்டாலும், அவை அவற்றை சீந்தாமல், நீஞ்சும் வயதிலேயே கீழே கிடக்கும் குப்பைகளை கை விரல்களில் எடுத்து ஆராய்ச்சி செய்யும். அதிலும் முடி போல ஏதேனும் கிடைத்து விட்டால் போதும். அது விரல்களில் சிக்கிக்கொண்டுள்ளதையே, திரும்பத்திரும்ப ரசிக்கும். :)

    >>>>>

    ReplyDelete
  2. லயாக்குட்டி சமத்தோ சமத்து. இந்தச்சின்ன வயதிலேயே, பாட்டி கஷ்டப்படுகிறாளே என்று நினைத்து, சமையல் கட்டுக்கு வந்து இவ்வாறு உதவிசெய்கிறாளே ! :) இதற்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்!

    >>>>>

    ReplyDelete
  3. //இரு கன்னம் குழிய சிரித்து மயக்கி விடுகிறாள்//

    சிந்திக்க வைக்கும் மிக அருமையான நிகழ்வு. கற்பனை செய்தாலே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  4. படங்கள் எல்லாமே அழகோ அழகாகத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
    ஆத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    >>>>>

    ReplyDelete
  5. //மேன் மேலும் பதிவுகள் போட உங்கள் அனைவரின் (முக்கியமாக கோபு அண்ணா) வாழ்த்துக்கள் எனக்கு அவசியம் //

    ஆஹா, சந்தோஷம். புதுப்பதிவுகள் வெளியிட்டுள்ளீர்கள் என்பது என் கவனத்துக்கு எப்படி வரும் ஜெயா? என் டேஷ் போர்டில் எதுவும் சரியாகத் தோன்றுவதே இல்லை. நானும் அங்கு அதிகமாகச் சென்று பார்ப்பதும் இல்லை. புதுப்பதிவு இட்டால் உடனடியாக Just அதன் லிங்கை மட்டும் கோபு அண்ணாவின் மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அப்போது தான் என்னால் வர இயலும். OK யா?

    >>>>>

    ReplyDelete
  6. என் துபாய் பயணக்கட்டுரையின் மொத்தம் 20 பகுதிகளில் இன்று 16ம் பகுதி வெளியாகியுள்ளது. முதல் 10 பகுதிகளுக்கு தொடர்ச்சியாக என்னுடன் துபாய்க்கு வந்தீங்க ‘ஜெ’. பிறகு காணாமல் போய் விட்டீங்க. துபாய் பூராவும் வலை வீசி நான் தேடியும் உங்களைக்கண்டு பிடிக்கவே என்னால் முடியவில்லை.

    அதனால் பகுதி-11 முதல் பகுதி-16 வரை உடனே வாங்கோ, ஜெயா.

    நாம் சந்திக்க வேண்டிய இடம்: http://gopu1949.blogspot.in/2014/12/11.html

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete