புது மணத் தம்பதிகள் (எங்கள் மகள், மருமகன்) கோபு அண்ணா வீட்டில்
நான், என் கணவர் மற்றும் சம்பந்தி
அண்ணாவின் பரிசாக அவர் எழுதிய புத்தகங்கள்
அண்ணாவின் பரிசு ரூபாய் விசிறியை எங்கள் மாப்பிள்ளை ரசித்துப்பார்க்கிறார்.
அண்ணாவின் அன்புப்பரிசு எங்களுக்கு ஒன்று, புது மணத்தம்பதிகளுக்கு ஒன்று.
மகளின் திருமணம்
முடிந்ததும், சம்பந்தி வீட்டில் குலதெய்வ வழிபாட்டிற்காக செல்ல வேண்டும் என்று அவர்களே
ப்ரொக்ராம் போட்டு எங்களுக்கும் சேர்த்து (எனக்கும், என் கணவருக்கும்) டிக்கெட்டும்
புக் செய்திருந்தார்கள். முதலில் திருச்சி,
அங்கே நொச்சியத்தில் உருவாகிக் கொண்டிருந்த மகா பெரியவா ஆலயம், இளையாற்றன்குடியில்
உள்ள மாங்கல்யேஸ்வரர் கோவில், பிறகு அங்கிருந்து கன்னியாகுமரி, அங்கிருந்து நாங்குநேரியில்
உள்ள அவர்களின் குல தெய்வ வழிபாடு, பின் சென்னை திரும்புதல்.
திருச்சி என்றவுடன்
எனக்கு ஒரு ஆசை. கோபு அண்ணா வீட்டிற்குச் சென்று
அவரைப் பார்க்க வேண்டும் என்று. அவர் உடல்
நிலை சரியில்லாததால், சென்னைக்கு திருமணத்திற்கு வருவது சந்தேகம் தான். முயற்சி செய்கிறேன்
என்று சொல்லி இருந்தார். நாங்கள் திருச்சியில் தங்கியதோ அரை நாள். விடியற்காலையில் திருச்சி சென்றடைந்தோம். இதற்கிடையே BSNL TRICHYல் பணியாற்றி ஓய்வு பெற்ற
திரு பாலசுப்பிரமணியம் அவர்களுடன் சந்திப்பு.
அவரே நாங்கள் தங்குமிடத்திற்கு வந்து எங்களை சந்தித்தார். இத்தனைக்கும் நடுவில் கோபு அண்ணா வீட்டிற்குச் செல்ல
வேண்டும் என்ற ஆசை, நேரம் இருக்குமா தெரியவில்லை.
ஆனால் முதல் நாளே அண்ணாவிடம் தெரியாததுபோல் பேசி விலாசம் வாங்கிக் கொண்டேன். நைசாக சம்பந்தி மாமாவிடம் விஷயத்தைச் சொன்னேன்.
அவர் “அதற்கென்ன தாராளமாகப் போகலாமே” என்று சொல்லிவிட்டார்.
திரு பாலசுப்பிரமணியம்
அவர்களை சந்தித்தபின் நொச்சியத்திற்குச் சென்றோம். அங்கு திருமதி ராஜலட்சுமி அவர்களை
சந்தித்து விட்டு பாதி கட்டிய நிலையில் இருந்த கோவிலைப் பார்த்துவிட்டு அங்கிருந்து
இளையாற்றன் குடி மாங்கல்யீஸ்வரர் கோவிலில் இருந்து வெளியே வரும் போதே மணி 1145 ஆகிவிட்டது. அங்கிருந்து
நேரே கோபு அண்ணா வீட்டிற்குச் செல்லும் போதே மணி 1220 ஆகிவிட்டது. மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி செல்ல ரயிலை புடிக்க
வேண்டும். சம்பந்தி ரெயில்வேயில் பணி புரிவதால்
செல்போனில் தொடர்பு கொண்டதில் ரயில் அரை மணி தாமதாமாக வருகிறது என்று சொன்னார். எனக்கும் என் கணவருக்கும் (சஷ்டியப்த பூர்த்தி முடிந்து
அப்பொழுதுதான் அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறோமாம்) மற்றும் புது மணத் தம்பதிகளுக்கும்
ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் கோபு அண்ணாவும், மன்னியும். ஜாடிக்கு ஏத்த மூடி என்பார்கள். அது போல் அண்ணாவிற்கு ஏத்த மன்னி. மன்னியின் அந்தப் புன்னகை, இன்னும் மறக்க முடியவில்லை.
அண்ணா வீட்டில்
தயாராக ஸ்வீட், கூல்ட்ரிங்ஸ், சிப்ஸ் etc. etc.
வைத்திருந்தார்கள். போட்டோ எடுக்கக்கூட
நேரம் இல்லை. அவசர அடி சந்திப்பு. கூல் ட்ரிங்ஸை குடித்து விட்டு அண்ணாவின் பரிசாக
அவர் எழுதிய புத்தகங்கள், மற்றும் ரூபாய் விசிறி, வெற்றிலை, பாக்கு, பழம் etc. etc.
வைத்துக் கொடுத்ததை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். சிப்ஸ் வகையறாக்களையும் கட்டி
எங்களுக்கு கொடுத்து அனுப்பினார். அண்ணா, மன்னியின்
கால்களில் நான், என் கணவர், புது மணத் தம்பதிகள் விழுந்து நமஸ்கரித்து அவர்களின் வாழ்த்துக்களை
வாங்கிக் கொண்டு கிளம்பினோம். ரயில் நிலையத்திற்கு
வந்து சேருவதற்கு முன்பே அண்ணாவிடம் இருந்து போன். நாங்கள் கொடுத்த கல்யாண முறுக்கு, அதிரசம் எல்லாம்
ரொம்ப அருமையாக இருந்தது என்று. ரசித்து எழுதுவது
போல், சாப்பிடுவதிலும் அவர் ஒரு ரசிகர். அவர்
வீட்டு ஜன்னலில் இருந்து மலைக்கோட்டையை பார்த்து ரசித்தோம். ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்வார்கள். தினமும் காலை எழுந்ததும் மலைக்கோட்டையை தரிசிக்கும்
பேறு பெற்ற கோபு அண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர்.
சிறிது நேரமே என்றாலும்
மிகவும் நிறைவான சந்திப்பு. அனைவர் மனதிலும்
இன்றும் பசுமையான இனிக்கும் நினைவுகள். என் மகள் சொல்லி, சொல்லி மகிழ்கிறாள் ‘அம்மா, உனக்கு
என்ன ஒரு அருமையான மனிதர் என்று.
கோபு அண்ணாவுடன்
நேரே நிறையப் பேச வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசை நிறைவேறா விட்டாலும் அவரை சந்திக்கவாவது
செய்தோமே என்று மனதை தேற்றிக் கொண்டேன். இறைவன் அருள் இருந்தால் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்
என்றும் என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
அன்புள்ள ஜெயந்தி,
ReplyDeleteமனம் நிறைந்த ஆசிகள்.
வெகு அழகாக ஓர் பதிவு போட்டு மகிழ்வித்துள்ளீர்கள்.
புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதியை முதன் முதலாக எங்கள் ஆத்துக்குக் கூட்டி வந்து அசத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.
அதைவிட மகிழ்ச்சி தாங்கள் கொடுத்துப்போன நெய்யில் செய்த
அ தி ர ஸ ம் ... இன்னும் இன்றும் என் நாக்கிலேயே அதன் ருசி உள்ளது.
முன்பே தெரிந்திருந்தால் குறைந்தது ஒரு டஜன் அதிரஸமாவது எடுத்து வரச்சொல்லியிருப்பேன். ;)
தாங்கள் இங்கு நேரில் வந்துவிட்டுப்போன உடனேயே நானும் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அதன் இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
நம் சந்திப்பு பற்றி
http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html
தங்கள் பெண் குழந்தையின் திருமணம் பற்றி
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
தங்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி
என்றும் இதே சந்தோஷத்துடன் வாழ்க ! என ஆசீர்வதிக்கிறோம் !
பிரியமுள்ள கோபு அண்ணா + மன்னி
//புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதியை முதன் முதலாக எங்கள் ஆத்துக்குக் கூட்டி வந்து அசத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. //
Deleteஎல்லாம் இறைவன் சித்தம்.
//முன்பே தெரிந்திருந்தால் குறைந்தது ஒரு டஜன் அதிரஸமாவது எடுத்து வரச்சொல்லியிருப்பேன். ;)//
ம். ரொம்ப நன்னா இருக்கே. அந்த இனிப்பான உடம்பை (சுகர் உள்ள) இன்னும் இனிப்பாக்கவா? அடுத்த முறை வரும் பொழுது கண்டிப்பாக அதிரசத்துடன் வருகிறேன். மன்னியிடம் மொத்தத்தையும் கொடுத்து விடுகிறேன். நீங்க மன்னி கிட்ட “அதிரசமே, கனி ரசமே, ஒரே ஒரு அதிரசம் குடேன்னு’ கெஞ்சி வாங்கிக்கோங்கோ.
வரேன். ஆகஸ்ட் ஒண்ணுல இருந்து எந்த ராஜா எந்த பட்டணத்துக்கு போனாலும் விடாம வந்து பின்னூட்டம் கொடுக்கறேன்.
நன்றியுடன்
ஜெயந்தி ரமணி
தினமும் காலை எழுந்ததும் மலைக்கோட்டையை தரிசிக்கும் பேறு பெற்ற கோபு அண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர்
ReplyDeleteமணம் வீசி மனம் கவரும் வரிகள்..அருமையான
மறக்கமுடியாத சந்திப்பு இனிமையாக
பசுமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!
ராஜி மேடம்
Deleteஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
நான் உங்க வலைத் தளத்துக்கு வந்தாலும் வராட்டாலும் நீங்க வந்து வாழ்த்திடறீங்க. அதுக்கு ஒரு சிறப்புப் பாராட்டும், சிரம் தாழ்ந்த நன்றியும்.
அன்புடனும், வணக்கத்துடனும்
ஜெயந்தி ரமணி
//நான் உங்க வலைத் தளத்துக்கு வந்தாலும் வராட்டாலும் நீங்க வந்து வாழ்த்திடறீங்க.//
Deleteஅதற்கெல்லாம் பின்னனியில் பல காரணங்கள் உள்ளதாக்கும்.
அதெல்லாம் எங்களுக்குள் மட்டுமே உள்ள தேவ இரகசியமாகுமாக்கும். ;))))) ஒருவரை ஒருவர் நிழல் போலத் தொடர்ந்துகொண்டே இருப்போமாக்கும்.
நான் போகுமிடமெல்லாம் அவர்களும் வருவார்கள். இந்தப்பதிவினை தாங்கள் வெளியிட்டுள்ளீர்கள் என்ற அறிவிப்பினைத்தான் என் பதிவு பின்னூட்டப் பெட்டிகளிலெல்லாம் கொடுத்து விளம்பரப்படுத்தி உள்ளேனே
அவர்களின் அனைத்து ஆயிரக்கணக்கான பதிவுகளிலும் NOTIFY ME என்பதை நான் டிக் அடித்துவிட்டு, கருத்துக்களும் சொல்லி இருக்கிறேன். அதனால் அவர்களின் எந்தப்பதிவுக்கு யார் எப்போது வருகைதந்து என்ன கருத்தளித்தாலும், அதை அவர்கள் வெளியிடும் பக்ஷத்தில். அந்தத்தகவல் உடனடியாக எனக்கு மெயில் மூலம் வந்து சேர்ந்து விடும்.
அதுபோலவே என் பதிவுகள் அனைத்துக்கும் அவர்கள் பின்னூட்டமிட்டுள்ளதால், அவர்களும் என்னைப்போலவே NOTIFY ME என்பதில் டிக் அடித்துத்தான் இருப்பார்கள். அதனால் நாங்கள் இருவரும் எங்கே போனாலும் ஒருவருக்கொருவர் மிகச்சுலபமாகத் தெரிந்துவிடும்.
அவர்கள் போகுமிடமெல்லாம் நானும் நிழல் போலத்தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பேன். ஆனால் நான் தொடர்வதை தடயமாக அங்கெல்லாம் பதியவே மாட்டேன். என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை மட்டும் மனதுக்குள் ஏற்றிக்கொண்டு நழுவி வந்துவிடுவேன்.
இவர்கள் எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே அனுமானித்து, நான் அங்கு போய் கருத்தளிக்காவிட்டாலும், NOTIFY ME என்பதில் மட்டும், டிக் அடித்துவிட்டு வந்து விடுவேன்.
இவர்களின் கருத்துக்களைப்படிப்பதில் மட்டும் எனக்கு அவ்வளவு ஒரு ஆர்வமாக்கும்.
இதெல்லாம் உங்களுக்கு ஒன்றுமே விளங்காது/புரியாது ஜயந்தி. பேசாமல் விட்டுடுங்கோ.
அன்புடன் கோபு
//இராஜராஜேஸ்வரி July 28, 2014 at 4:28 AM
ReplyDeleteதினமும் காலை எழுந்ததும் மலைக்கோட்டையை தரிசிக்கும் பேறு பெற்ற கோபு அண்ணா ரொம்ப கொடுத்து வைத்தவர்
மணம் வீசி மனம் கவரும் வரிகள்..அருமையான
மறக்கமுடியாத சந்திப்பு இனிமையாக
பசுமையாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!//
எல்லோரையுமா என்னால் சந்திக்க முடிகிறது ?????
ஏதோ சிலர் மட்டும் அவர்களாகவே ஓர் தனிப் பிரியத்துடன் வருகிறார்கள். சந்திக்கிறார்கள். செல்கிறார்கள். நானும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு சிலரையாவது சந்தித்துவிடணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் !
நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?
எதற்குமே நமக்கு பிராப்தமும் சூழ்நிலையும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, நிறைவேறும்.
ஜெயந்தி மஹா சுறுசுறுப்பு. VERY VERY ACTIVE. அரை மணிக்குள் ஆயிரம் வேலைகள் தனக்குத்தானே செய்து எனக்கும் / எங்களுக்கும் உதவினார்.
நானும் என் வாழ்க்கையில் மேலும் ஒரு சிலரையாவது சந்தித்துவிடணும் என அடிக்கடி நினைப்பதுண்டு.//
Deleteநீங்கள் சந்திக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் உங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் கண்டிப்பாக செவி சாய்க்கப்படும்.
ஜெயந்தி மஹா சுறுசுறுப்பு. VERY VERY ACTIVE. அரை மணிக்குள் ஆயிரம் வேலைகள் தனக்குத்தானே செய்து எனக்கும் / எங்களுக்கும் உதவினார்.//
ஆஹா தன்யனானேன். இதைப் படித்ததும் ஆனை பலம் வந்து விட்டது. இன்னும் சுறுசுறுப்பாகிவிட்டேன்.
ஜெயந்தி.... உங்களுக்கு மாப்பிள்ளை அமைந்ததை விட சம்பந்தி மாமா [மாப்பிள்ளையின் அப்பா] அமைந்ததுதான் மிகவும் அதிர்ஷ்டம் என்பேன்.
ReplyDeleteமிகவும் நல்ல மனிதர். பார்த்த மாத்திரத்தில் அவருக்கு நான் நிறைய மார்க் கொடுத்துவிட்டேன்.
தங்களின் அவசரப்பயணத்திலும், தங்கள் விருப்பத்திற்கு இணங்க தாங்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று சொன்ன ஆவலையும் உஅடனே நிறைவேற்றிக் கொடுத்துள்ளாரே !
தாங்களும் அவரும் மட்டுமே முதலில் சரியான பாதையில் வந்து, மின் தடையாய் இருந்தும் சுறுசுறுப்பாக மாடிப்படி ஏறி எங்கள் இல்லத்து சரியாக வந்து சேர்ந்தீர்கள்.
மற்றவர்கள் எல்லோரும் உங்களை பின்பற்றி வராமல் அடுத்த கட்டடமான CARE EDUCATIONAL INSTT. + BANK OF BARODA HEAD OFFICE பாதையில் நுழைந்து விட்டார்கள். பிறகு நாம் அவர்களை மாடியில் இருந்தவாறே, இந்த சரியான பாதையில் வரச்சொன்னோம். அதற்கும் கூட சம்பந்தி மாமாவே கீழே இறங்கி அவர்களை மேலே அழைத்துவரச் சென்றாரே !
உங்கள் அனைவரிலுமே சம்பந்தி மாமா மட்டுமே முகத்தில் டென்ஷன் ஏதும் இல்லாமல் அமைதியாக, மகிழ்ச்சியாக தன்மையாக மென்மையாக மேன்மையாக ஒத்துழைத்துப் போவராகத் தோன்றினார்.
தாங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என் இல்லத்தில் வைத்துக்கொடுத்த மங்கலப் பொருட்களை அவரிடம் மட்டுமே ஒப்படைக்கப்போக, பொறுமையாக அருமையாக ஒரு மிகப்பெரிய பையை அகலமாக விரித்து அதில் போடப்போட அவற்றை இன்முகத்துடன் வாங்கிக்கொண்டு சுமந்து வந்தாரே அந்த கண்ணியமான பெரிய மனுஷ்யர் !
இரயில் அரை மணி தாமதம் என விசாரித்துச் சொல்லி தங்களின் விஜாரத்தையும் போக்கியுள்ளாரே !
இதுபோலெல்லாம் ஜாலியான அமைதியான பொறுப்பான அட்ஜஸ்டபிள் சம்பந்தி அமைவதும் அதிர்ஷ்டம் தானே, ஜெயந்தி. அவரை நான் மிகவும் விஜாரித்ததாகச் சொல்லவும்.
புது நாட்டுப்பெண் வந்துள்ள சந்தோஷத்தினை, [என்னைப்போலவே] என்னால் அவரின் முகத்திலும் காண முடிந்தது. ;)))))
தங்களுடன் அருமைப்பேத்தி லயாக்குட்டியை கூட்டிக்கொண்டு வராதது தான் எனக்கு ஒரு சின்னக்குறையாக இருந்தது.
பிரியமுள்ள கோபு
அன்புடையீர்! வணக்கம்!
ReplyDeleteஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/blog-post.html
திருமதி. ஜெயந்தி ஜெயா அவர்கள்
வலைத்தளம்:
மனம் [மணம்] வீசும்
மணம் [மனம்] வீசும்
ஆன்மீக மணம் வீசும்
http://manammanamviisum.blogspot.in/2013/02/blog-post_13.html
அரேபியாவில் ஆடு மேய்த்தவர்
(வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)
http://manammanamveesum.blogspot.in/2015/04/blog-post.html
மன்மத ஆண்டே வருக வருக !
http://aanmiigamanam.blogspot.in/2015/02/blog-post_16.html
எங்கள் வீட்டில் சிவபூஜை
http://manammanamveesum.blogspot.in/2015/01/blog-post_27.html
கோட்டை இங்கே கோவில் அங்கே
http://manammanamviisum.blogspot.in/2013/01/blog-post_5016.html
டைப்ரைட்டரே குலதெய்வம்
http://manammanamviisum.blogspot.in/2013/07/blog-post.html
பிஞ்சு நெஞ்சில் நஞ்சு
http://manammanamviisum.blogspot.in/2012/12/blog-post_11.html
பரிசுக்குத்தேர்வான ’காவல்’ சிறுகதை
http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
அண்ணா வீடு எங்கே, இன்னும் கொஞ்சம் தூரம்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE