பரிசு மழை
பணி ஓய்வு பெரும்
பொழுது இப்படி ஒரு பரிசு மழையில் நனைவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
முதலில் என்னுடன்
பணிபுரிந்த அன்புத்தோழமைகள் கொடுத்த பரிசுப் பொருட்களைப் பார்ப்போமா?
முதல் பரிசு
இந்த அழகான மாலை
என் தோழி டி.கே ஜெயந்தி, என்னுடன் பணி புரிபவர் கொடுத்தது. அவர் ”நான் வெளிநாடு செல்ல இருப்பதால் இப்பொழுதே
கொடுத்து விடுகிறேன்” என்று ஏப்ரல் மாதமே இந்தப் பரிசை எனக்குக் கொடுத்து விட்டார். முதல் பரிசு முக்கியமான பரிசு அல்லவா?
**********
அடுத்த பரிசு
இந்த SERVING
DISH எங்கள் அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்த திருமதி திலக ராணி கொடுத்தார். இவரும் தன் மகள் வீட்டிற்கு அமெரிக்கா செல்ல இருந்ததால்
பணி ஓய்வு பெறும் தினத்திற்கு முன்பே என் இருக்கைக்கு வந்து, இந்த DISHல் வெற்றிலை,
பாக்கு, பழம் ரவிக்கைத் துண்டு ஆகியவைகளைக் கொடுத்து விட்டுச் சென்றார்.
**********
அடுத்த பரிசு
இந்த விநாயகர்
என்னுடன் பணி புரிந்துவிட்டு வேறு அலுவலகத்தில் (எல்லாம் எங்க DEPARTMENT தான்) பணி
புரியும் திருமதி ராஜி நாராயணன் கொடுத்தது.
என்னுடைய உதவியாளர்
பெயர் திரு விநாயகம். (PHONE MECHANIC) நான் எப்பொழுதும் விநாயகம், விநாயகம் என்று
கூப்பிட்டுக் கொண்டிருப்பேன். பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு 2, 3 நாட்கள் முன்பு, பக்கத்து அறையில் இருந்த ஒருவர், ‘அம்மா எத்தனை நாளைக்கு
இப்படி விநாயகம், விநாயகம்ன்னு கூப்பிடப் போறீங்க. இன்னும் 2, 3 நாள் தானே’ என்றார். அதற்கு நான், ‘இல்லை, இல்லை வீட்டிற்கு சென்றதும்
எப்பொழுதும் அந்த விநாயகனை (அதான் தொப்பையப்பனை) கூப்பிட்டுக் கொண்டே இருப்பேன். அவன் எனக்கு என்றும் நல்லதைத் தான் செய்வான் என்று
சொல்லி ஒரு 5 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது.
ராஜி என் அறைக்கு வந்து ஒரு பார்சலை என் கையில் கொடுத்தாள். அதைப் பிரித்த எனக்கு மெய் சிலிர்த்தது. அதுதான் இந்த விநாயகர். ‘என்ன
மேடம் நீங்க விநாயகரை கும்புடுவேன்னு சொல்லி 5 நிமிஷம் கூட ஆகலை, இவர் உங்க கையில வந்து
உக்காந்திருக்காரே’ என்று திரு குப்பன் (PHONE MECHANIC) என்பவர் ஆச்சரியப்பட்டுப் போனார். முன்னே
சொன்ன கமெண்ட்டும் திரு குப்பன் அடித்ததுதான்.
**********
இந்த மாடும், கன்றும்
என் உயிர்த்தோழி திருமதி வசந்தா ராம்குமார் கொடுத்தது.
**********
என் மகன், மகளின்
புகைப்படம் வைத்திருக்கும் இந்த PHOTO FRAME திருமதி கீதா நாகராஜன் கொடுத்தது.
**********
இந்த வெங்கடாசலபதி,
திருமதி உமா மகேஸ்வரி சங்கர நாராயணன் கொடுத்தது.
இது TRAILOR தான்.
MAIN PICTURE பின்னாடி வரும்.
தொடரும்……………..




















