Tuesday, October 27, 2015

இவள் இல்லாமல்
நான் இல்லை.





இவள்தான் என் இனிய தோழி கருப்பழகி.  இவள் வயது ஏழரை.  


இவள் என்னுடன் இணைந்தது ஜனவரி 2008ல்.   இவள் பெயர் ஆனந்தா.  வருடங்கள் ஏழரை ஆனாலும் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறாள்.  அழகாக இருக்கிறாள்.  அவளுக்கு இட்ட வேலைகளை அருமையாக செய்கிறாள்.  இவளுக்கு அப்புறம் என்னை வந்து இணைந்தவர்கள் கூட (அதான் ‘மனைவியை நேசிக்கறவங்க எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க’ன்னு விளம்பரப்படுத்துவாங்களே அவளே தான்)  சொதப்பறபோது இவள் மட்டும் எப்பொழுதும் கை கொடுக்கும் கையாகவே இருக்கிறாள். 


அப்படி என்ன அருமையான வேலைகள் என்று கேட்கிறீர்களா?


சாம்பாருக்குத் தேவையான பருப்பு வேக வைக்க, விதம், விதமான கூட்டுகள் செய்ய,

சாம்பார், ரசம், பொங்கல், உப்புமா, சூப், பாயசம், நவராத்திரிக்கு தினம், தினம் சுண்டலுக்கு தானியங்கள் வேக வைக்க,

ஆடிக்கூழ் தயாரிக்க, ஏன் வெண்ணை காய்ச்சக் கூட – இப்படி எந்த வேலை கொடுத்தாலும் மிக மிக அருமையாக, கன கச்சிதமாக செய்து முடித்துவிடுவாள்.



இவள் ஒரு நாளில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறையாவது என்னுடன் இணைந்து வேலை செய்கிறாள்.  இதுநாள் வரை ஒரு நாளும் இவள் வேலை நிறுத்தம் செய்ததே இல்லை.  சொதப்பியதும் இல்லை. 


நம்பினால், நம்புங்கள் இவளுக்கான ரப்பர் வளையம் (GASKET) இது வரை மொத்தம் மூன்றே மூன்றுதான் உபயோகித்திருக்கிறேன் இந்த ஏழரை வருடங்களில்.  அதிலும் ஒன்று என் அஜாக்கிரதையால் பிய்ந்து போயிற்று.



ஆனால் இவளுக்குப் பின் வந்த மற்றவர்களுக்காக நான் மாற்றிய ரப்பர் வளையங்களின் எண்ணிக்கை கணக்கே இல்லை.


இப்ப புரிந்ததா இவளை ஏன் என் இனிய தோழி என்று சொன்னேன் என்று.


9 comments:

  1. ஆஹா, தங்களின் இனிய தோழி கருப்பழகியைப்பற்றி எக்கச்சக்கமாகச் சொல்லி அவளை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும் என்ற என் ஆவலைத் தூண்டி விட்டுவிட்டீர்களே ! :)

    நான் எதற்காக அவளைப்பார்க்கணும் என்று நீங்க அங்கு முணுமுணுப்பது எனக்கும் கேட்கிறது.

    வேறு எதற்கு ..... நம் ஜெயா செய்யும் அன்றாட ருசியான சமையல்களை நானும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்க மட்டுமே. :)

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. //நான் எதற்காக அவளைப்பார்க்கணும் என்று நீங்க அங்கு முணுமுணுப்பது எனக்கும் கேட்கிறது. //

      தாராளமா அவள பார்க்கலாமே.

      மன்னியையும் அழைச்சுண்டு வாங்கோ, வந்து ஒரு வாரம் தங்குங்கோ, அதுக்கு மேலயும் தங்கலாம். எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ரொம்ப சந்தோஷம் தான்.

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் அவர்களே, என் வலைப் பக்கம் வருமை தந்ததற்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  3. ஆஹா அருமை ஜெயந்தி அவர்களே. பாராட்டும் மனம். அதற்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அதென்ன Anonymous. முகமும், முகவரியும் மறைப்பதற்கு என்ன காரணம்.

      Delete
  4. அருமை! நமக்கு உதவும் பொருட்களுக்கு நன்றி சொல்லத்தான் வேணும்! இன்றைக்குத்தான் உங்க பதிவை முதல்முறையாகப் பார்த்தேன்.

    இனிய பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. எனது வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு மனமார்ந்த நன்றி.

      உங்கள் பாராட்டுக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

      Delete
  5. எனது வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு மனமார்ந்த நன்றி.

    உங்கள் பாராட்டுக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.

    ReplyDelete