Google+ Followers

Wednesday, May 3, 2017

 பிள்ளையில்லா வீடு


சிறு பிள்ளையில்லா வீடு
வைத்தது வைத்த இடத்தில்

கொட்டிக் கவிழ்க்க ஒரு சுட்டி இல்லை

இட்ட கோலத்தை அழிக்க

ஒரு பிஞ்சுப் பாதம் இல்லை

இரு கை கொண்டு அள்ளி

சோற்றை வாரி இறைக்கவும் ஆளில்லை.

காது குளிர ம்மா, ப்பா,

தாத்தா, பாத்தி என்று
அழைக்கும் மழலைச் சொல்
கேட்கவே இல்லை.

ஆனால், எந்நேரமும் 

முழுச் சுத்தமாக
இருக்கும் வீடு 
எனக்கு தேவையே இல்லை.

இப்படி கலைந்த கோலமும், 

சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும்
பிள்ளைகள் இருக்கும் வீடுதான் 
என் விருப்பம்.

***
நேற்று மாலை மருமகள் போட்ட கண்ணன் காலடிகளை பேத்தி பூஜை முடிந்த சிறிது நேரத்திலே அழித்து விட்டாள். அப்பொழுது என் மகன் கேட்டான், “அம்மா! சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில் கண்ணன் பாதங்கள் எவ்வளவு நாட்கள் அழியாமல் இருக்கும்” என்று.
அப்பொழுது தோன்றியது இது.

மீள் பதிவு

15 comments:

 1. வீட்டில் போடும் கோலத்தைக் குழந்தைகள் அழிக்கும்-கோலத்தைக்காண கொடுப்பிணை வேண்டும்.

  நல்லதொரு மீள் பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா.

   ACTUAL ஆ இந்த பதிவு முக நூலில் மட்டும்தான் போட்டிருந்தேன். வலைத் தளத்தில் இப்பொழுதுதான் பதிவிட்டுள்ளேன்.

   Delete
 2. குழந்தை இருக்கும் வீட்டின் சுவாரஸ்யங்களே தனி. சுவரெல்லாம் பென்சில் கோட்டோவியங்களாய்..

  ReplyDelete
  Replies
  1. வரவுக்கு நன்றி,

   குறும்புகளை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.

   Delete
 3. பொருட்கள் வைத்தது வைத்த இடத்தில் இருந்தால் அது வீடல்ல... மியூசியம் என்று படித்தது நினைவுக்கு வந்தது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்.

   என் தோழி ஒருத்தி அவள் கணவர் வீடு NEAT ஆக இல்லை என்று சத்தம் போட்டபோது “நான் ஒன்றும் EXHIBITION நடத்தவில்லை. வருபவர்களுக்கு காட்சிப் பொருளாக வீட்டை வைக்க” என்று பதிவில் கூறினாளாம். அதே கருத்தை நீங்கள் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

   மிக்க நன்றி.

   Delete
 4. என்னவோ எனக்கு வீடு நீட் ஆக இருக்கணும், எதிலும் ஒரு டிசிப்பிளின் இருக்கணும்னு ஒரு அப்சஷன். ஆனா பசங்க, பசங்கமாதிரிதான் வச்சுக்குங்க. இங்க வந்தா, ஒவ்வொரு நிமிடமும் சொல்லிக்கிட்டே இருப்பேன். (அதை ஏன் இங்க வச்ச, அதை எடுத்து அங்க வை அப்படின்னு)

  கவிதை சொல்லும் சேதி அர்த்தமுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் நமக்கு சொல்லிக் கொடுப்பாங்க எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்கணும்ன்னு. ஆனா விளையாடும் போது மறந்து போயிடுவாங்க.

   என் ஒரு வயது பேத்தி யாருடைய பொருள் (கைப்பேசி, கண்ணாடி) அவள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் அவர்களிடம் கொடுத்து விடுவாள்.

   ஆனால் அடுக்களையில் பாத்திரங்களை எடுப்பதும், விளையாடுவதும் அவள் வாடிக்கை.

   Delete
  2. 'நெல்லைக்கு சில வருடங்களுக்கு முன், என் ப்ரொஃபசர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் மனைவி சொன்னது. எப்போதும் ரெண்டு பேரன்'களும் சத்தம் போட்டுக்கொண்டு, சண்டை இதோட இருப்பாங்க. ஒரு நாள் ஒரு சத்தமும் காணோம். கொஞ்ச நேரமா இப்படி இருக்கவும் அவங்களுக்குச் சந்தேகம் வந்து பாத்தா ஹால்ல பசங்க இல்லை. எங்கடான்னு பார்த்தா, வீட்டுல உள்ள பழைய பேப்பர் எல்லாம் எடுத்துக்கொண்டு, மாடிக்குப் போய், ரெண்டுபேரும், அங்கிருந்து ஒவ்வொரு பேப்பரா வெளில வீசி எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்களாம். ரோடெல்லாம் பேப்பர் மயம் என்று சொன்னார் (அப்போ கோவம் வந்ததாம்.... ஆனால் சிரித்துக்கொண்டே சொன்னார்). பசங்க பண்ணறதுல, சின்ன சேட்டை என்ன பெரிய சேட்டை என்ன....

   Delete
 5. மீண்டும் எழுத வந்தது மகிழ்ச்சி.
  அருமையான மீள் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி. வரவுக்கு மிக்க நன்றி.

   ஒரு விஷயம் கேளுங்க. நான் முக்திநாத் போகும் முன் உங்க வலைத்தளம்ன்னு தெரியாமயே ‘திருமதி பக்கங்கள்’ வலைத்தளத்திற்கு வருகை தந்திருக்கிறேன்.

   Delete
 6. வீடு என்றால் கலைந்து இருக்கணும்! அதது அதனதன் இடத்தில் இருந்தால் அது வீடு இல்லை! :) உங்கள் தோழி சொல்வது உண்மையே!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் என் மகனும் இப்படியே சொல்லுவான்.

   Delete
 7. ஆனால் சில வீடுகளில் டைனிங் டேபிள், சோஃபா போன்றவற்றின் மேல் பொருட்கள் குவிந்து கிடக்கும்! அப்படியும் இருக்கக் கூடாது!

  ReplyDelete
  Replies
  1. ஆஹாஹா! அதுவும் சரி. குழந்தைகள் கலைத்ததும், நாம் ஒழித்து அழகாக வைக்காததும் பார்த்தாலே தெரிந்து விடுமே.

   Delete