Thursday, August 7, 2014

தேர் நிலைக்கு வந்தாச்சு – பகுதி 1.



ஆமாங்க. ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல, கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் இந்தத் தேர் (அட என்னைதாங்க சொல்லறேன்) வேலை என்னும் சாலைகளில் ஓடி 31.05.2014 சனிக்கிழமை திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில்  மாலை 0530 மணிக்கு நிலைக்கு வந்துடுத்து.  ஆமாங்க அன்றுதான் பணி ஓய்வு பெற்றேன்.  அதாவது, அலுவலகப் பணியிலிருந்து மட்டும்.  மத்தபடி நம்பள சமையலறை, இட்லி, தோசை, மாவு, கிரைண்டர் இத்யாதி, இத்யாதி எல்லாம் விடவே விடாதே.  இப்ப ஆற, அமர சமைத்து, ஆத்துக்காரருக்கு பக்கத்துல இருந்து சாப்பாடு போட்டு, பழங்கதை, புதுக்கதை பேசி, சரி, அதுக்கெல்லாம் கடைசியா வருவோம்.
 
கொஞ்சம் திரும்பிப் பார்த்தா எனக்கே பிரமிப்பா இருக்கு.  இவ்வளவு வருஷங்களா உழைச்சிருக்கேன்.  அம்மாடி.  ஆனா வேலைக்குப் போறது எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க.  பல அலுவலகங்கள், பலவித மனிதர்கள், பலப்பல அனுபவங்கள், மனதுக்கு நிறைவான சம்பவங்கள். எல்லாத்தையும் பத்தி கொஞ்சம் விவரமாவே சொல்றேனே.
 
அடையார் டாக்டர் தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் (இப்பதான் இந்த பேரு.  நாங்க படிக்கும்போது GOVERNMENT POLYTECHNIC FOR WOMEN) DIPLOMA IN COMMERCIAL PRACTICE 3 வருடப் படிப்பு SHORTHAND HIGHER, TYPEWRITING HIGHER, ACCOUNTANCY HIGHER, மற்றும் COMMERCE SUBJECTS களும் சேர்த்து பாஸ் செய்துவிட்டு வெளியே வந்ததும் எதிர்காலமே ஜகஜ்ஜோதியாக தெரிந்தது.  அந்தக் காலத்துல முக்கால்வாசி பேருக்கும் குலத்தொழிலே TYPEWRITING SHORTHAND தானே.  FINAL YEAR EXAM எழுதின உடனேயே ENGLISH ELECTRIC COMPANYல் வேலை கிடைத்தது.  மிகவும் குறைந்த நாளே அங்கே வேலை செய்துவிட்டு, EMPLOYMENT EXCHANGE ல் பதிவு செய்த உடனேயே (அதெல்லாம் அந்தக் காலம்ன்னு நீங்க புலம்பறது என் காதுல விழுதுங்க)
மாநில அரசாங்கத்துல வேலை கிடைத்தது.  அங்க ஒரு 10 மாதங்கள் வேலை செய்தேன். அதுக்கப்புறம் 22.08.1974 DEPARTMENT OF TELECOMMUNICATIONல STENOGRAPHERஆ JOIN பண்ணினேன். ஆகஸ்ட் 1974ல  இருந்து 31.05.2014 வரை DOT, BSNL இரண்டிலும் மோத்தம் 39 ஆண்டுகள் 9 மாதங்கள் பணி செய்து, நிறைவான பணி செய்து பணி ஓய்வு பெற்று விட்டேன்.  ஆக மொத்தம் கிட்டத்தட்ட 41 ஆண்டுகள், கூட்டிக் கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வந்துடுத்தா?







11 comments:

  1. வாழ்த்துகள். பணி ஓய்வு பெற்று 2-3 மாதங்கள் ஆகியும் இன்னும் என் வலைத்தளம் பக்கம் தலையை வைத்து படுப்பதோ, சிறுகதை விமர்சனப் போட்டிகளில் கலந்து கொள்வதோ இல்லை. அதனால் ‘ஜெ’ வோடு நான் டூ வாக்கும். இன்னும் 11 வாரம் ... 11 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. நினைவிருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கோபு அண்ணா
      என்ன செய்யறது. பொண்ணா பொறந்துட்டா அப்படித்தான். வீட்டு வேலை, இந்த லயாக்குட்டியோட ஆட்டம் (ஆமாம் அண்ணா கணினிக்கு முன்னாடி வந்து உக்காந்தாலே ‘பாட்டி, சரிகம பதநிச் போடு, விஷமக்காரக் கண்ணன், தந்தந்நாநா, போ சம்போ போடு, ஜிராபி காட்டு, போறாத்துக்கு இப்ப நம்ப அதிராவோட வலைத்தளத்தில இருக்கற பூனையெல்லாம் பாத்துட்டா, அதிராவுக்கு ரசிகையா ஆகிடுவா போல இருக்கு. எப்பப்பாரு பூனை காட்டு, நாய் காட்டு. அவ தூங்கும் போது தான் கணினிக்கே வர முடியறது.

      குருவி தலையில பனங்காய வெச்சா மாதிரி நீங்க வேற ‘வலைச்சர ஆசிரியர்’ பதவியை வாங்கிக் கொடுத்துட்டீங்க. இன்னும் ரெண்டு நாள்.

      தலை வெச்சு படுக்கறது என்ன. உங்க வலைத் தளத்துலயே குடி இருக்கேன்.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. அந்த கோபத்துல தான் இங்க விரிவா பின்னூட்டம் கொடுக்கலயோ? உங்க கோபம் நியாயமானது தான்.

      தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்கோ அண்ணா

      Delete
  2. Wish u a Happy, Healthy and peaceful life..God bless u

    ReplyDelete
    Replies
    1. பலராமன் ராமச்சந்திரன் சார்

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  3. Replies
    1. Chandrasegar Gurusamy Sir,

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  4. அன்பின் ஜெயந்தி ரமணீ - 41 ஆண்டு காலம் அரசுத் துறையில் பணியாற்றி - பேருடனும் புகழுடனும் பணி நிறைவு செய்து மகிழ்ச்சியுடன் வீட்டினைக் கவனிக்க கிடைத்த வாய்ப்பென - லயாக் குட்டியினைக் கவனியுங்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. திரு அன்பின் சீனா சார்

      வருகைக்கு நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  5. இனிமையான ஓய்வுக்காலம் அமைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. எழில்

      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete