திங்கள் ஒன்று முடிந்தது
திருமணம் இனிதே நடந்து முடிந்து.
காலை எழுந்ததும்
‘நீ குளித்து விட்டாயா?
இருந்தாலும் பரவாயில்லை” என்று
பின்னே வந்து கட்டிப் பிடித்து
புறங்கழுத்தில் முத்தமிட
அவள் இல்லை
சமையலறைக்கு வந்து
சொட்டு வத்தல் குழம்பை
உள்ளங்கையில் விட்டு சுவைத்து
‘சூப்பர்’ என்று பாராட்டவோ
சிட்டிகை உப்பு சேர் என்று
ஆலோசனை சொல்லவோ
அவள் இல்லை.
அன்னைக்குப் பரிந்து
தந்தையை உரிமையுடன்
கண்டிக்கவும் அவள் இல்லை.
அலுவலகத்திலிருந்து நான்
வீடு வந்து சேரும் நேரம்
ஐந்து நிமிடம் கடந்தாலும்
‘எங்க இருக்க
எப்ப வீட்டுக்கு வருவ?’ என்று
தொலைபேசியில் கேட்க
அவள் இல்லை.
முகம் பார்த்தே
‘அம்மா உனக்கு என்ன ஆச்சு?
உடம்பு சரியில்லையா?
என்று அக்கறையுடன்
விசாரிக்க அவள் இல்லை.
இன்னும் பட்டியல் இட்டால்
எத்தனையோ இல்லைகள்...............
இத்தனை இல்லைகள்
இருந்தாலும்
ஒன்று மட்டும் ‘இருக்கு’
அது என்ன தெரியுமா?
அவள் வீட்டில்
ஆனந்தனுடன்
ஆனந்தமாய் இருக்கிறாள்
என்ற எண்ணம் மட்டுமே
எனக்கு ஆனந்தமாய் இருக்கு.
//ஆனந்தனுடன் ஆனந்தமாய் இருக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே
ReplyDeleteஎனக்கு ஆனந்தமாய் இருக்கு.//
இதைக்கேட்கும் எனக்குப் பரமானந்தமாக இருக்கு ! ;)))))))
மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள் !
பிரியமுள்ள கோபு அண்ணா
கண்களில் நீர் துளிர்க்கின்றது..
ReplyDeleteநானும் என் மகளை நினைத்துக் கொண்டேன்!..
அவரவர்கள் வீட்டில் ஆனந்தமாக இருக்கிராள் இதைவிட ஆனந்தம் வேறு என்ன இருக்கிறது? எல்லா அம்மா பெண்ணும் இந்த வகைதான்.
ReplyDeleteஸந்தோஷமாக இருக்கிரது.படிக்க. நன்றாக இருக்க என் ஆசிகள்.அன்புடன்
இது... தாய்மை.
ReplyDeleteஉங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.
சந்தோஷம் கொண்டாடும் தாய்மை..!
ReplyDelete