Friday, August 15, 2014

முத்துச் சிதறல்


சூரியனும்,

மேகங்களும்

விளையாடும்

கண்ணாமூச்சி

விளையாட்டைக்

கண்டு களித்து நீ சிந்திய

புன்னகைதான்

முத்துச் சிதறலாய் 

பெய்த இந்த மழையோ?



ஏன் வருண பகவானே

கொஞ்சம் இடி, இடியென்று

வேண்டாம் குறைந்த பட்சம்

கல, கலவென்றாவது

சிரிக்கக்கூடாதா? 



பூமித்தாயின்

தொண்டைக்குழிகூட

நனையவில்லையாமே!

1 comment:

  1. கவிதாயினி ‘ஜெ’யின் இந்த இனிய ஈரமான கவிதை என் தொண்டைக்குழியை நன்கு நனைய வைத்து விட்டது.

    அதுபோதும் ;)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete