இன்று திடீரென்று
என்னுடன் www.arusuvai.com
ல் இணைந்திருந்த தோழி திருமதி மாலதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். முகநூலில் என் நட்பு வட்டத்தில் இருக்கும் திருமதி
அனுராதா (இவர் என்னுடன் ஒன்றாக பணி புரிந்தவரும் கூட) தன்னுடன் படித்தவர் போல் இருப்பதாகவும்,
முடிந்தால் விசாரித்து சொல்ல முடியுமா என்றும் கேட்டார். அவர் சொன்ன அடையாளங்களை சொல்லி விசாரித்தால் சாட்சாத்
நான் மாலதியுடன் பள்ளியில் படித்த அதே அனுராதாதான் என்றார். மாலதியின் தொலைபேசி எண்களை
அனுராதாவிற்கும், அனுராதாவின் தொலைபேசி எண்ணை மாலதிக்கும் SMS செய்து
விட்டேன். கிட்டத்தட்ட 30, 35 ஆண்டுகளுக்குப்
பிறகு இரு தோழிகள் இணைவதற்கு நான் ஒரு கருவியாக இருந்ததற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.
வாழ்க நட்பு!.
//நான் ஒரு கருவியாக இருந்ததற்கு மிகவும் மன மகிழ்ச்சி அடைகிறேன்.//
ReplyDeleteYOU ARE ALWAYS A WONDERFUL INSTRUMENT. ;)))))
சிற்றெறும்புபோல என்னவொரு சுறுசுறுப்பு, பரபரப்பு ! அடேங்கப்பா !!
அடேங்கப்பா !!! அசந்துபோனேன்.
//வாழ்க நட்பு!//
அதுபோல நம் நட்பும் தொடரட்டும்.
பிரியமுள்ள கோபு
கோபு அண்ணா
Deleteஉங்கள் வாழ்த்து என்றும் தொடர வேண்டும்.
நன்றியுடனும், அன்புடனும்
ஜெயந்தி ரமணி
மாலதி & அனுராதாவுக்கு என் வாழ்த்துக்கள். முகநூல் இப்படி எத்தனையோ அற்புதங்களைச் செய்கிறது. இடையில் கருவியாக இருந்தாலும் இது கொள்ளை சந்தோஷமில்லையா அக்கா!
ReplyDeleteஆமாம். இமா எனக்கு ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சி.
Delete